அரை மில்லியன் புதிய வாக்காளர்களில் 28விழுக்காட்டினரின் அடையாளம் தெரியவில்லை

1ab khalid

2008-க்குப் பிறகு சிலாங்கூரில் பதிவுசெய்து கொண்டிருக்கும் 500,000 புதிய வாக்காளர்களில் 28 விழுக்காட்டினரை அடையாளம் காண இயலவில்லை என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறுகிறார்.

1ab khalid1“வாக்காளர் பட்டியலைச் சுத்தப்படுத்த ஒத்துழைக்கத் தயார் எனத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதினோம், ஆனால் அவர்கள் அது சிலாங்கூர் அரசின் வேலை அல்ல என்று கூறிவிட்டார்கள்”, என்று அப்துல் காலிட் தம் முகநூல் பக்கத்தில் கூறினார்.

மந்திரி புசார் இன்று காலை கோலாலும்பூர் லேக் கிளப்பில் மலேசியாவின் 13வது பொதுத் தேர்தல்மீதான பன்னாட்டு மாநாட்டில் உரையாற்றினார்.

வாக்காளர் பட்டியலைச் சரியாக வைப்பதற்கு மாநில அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இசியும், மத்திய அமைச்சரும் சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவருமான நோ ஒமாரும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக அவர் கூறினார்.

 

TAGS: