ஜயிஸ் 38 பள்ளிவாசல்களைக் கண்காணித்து வருகிறது

சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (Jais), சிலாங்கூரில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தளங்களாக மாறியுள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ள 38 பள்ளிவாசல்களைக் கண்காணித்து வருகிறது. “முன்பு 36 பள்ளிவாசல்கள்தாம் எங்கள் பட்டியலில் இருந்தன. இப்போது மேலும் இரண்டு சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன”, என்று ஜயிஸ் தலைவர் மர்சுகி உசேன் கூறியதாக இன்றைய சினார்…

சிலாங்கூர் நீர் விவகாரம்: பேச்சுக்கிடமில்லை: முகைதின்

சிலாங்கூர் நீர் விவகாரத்துக்குப் பேசித் தீர்வு காணலாம் என்று சிலாங்கூர் மந்திரி புசார் விடுத்த அழைப்பைத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் நிராகரித்தார். “முகைதின் ‘முடியாது’ என்றார்,அதே வேளையில் அவ்விவகாரத்தில் சட்டத்துறைத் தலைவ(ஏஜி)ரின் ஆலோசனையை நாடப்போவதாகவும் தெரிவித்தார்”, என்று ஊராட்சிக்குப் பொறுப்பாகவுள்ள சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு…

போனஸ் கொடுப்பதில் நஜிப்பை முந்திக்கொண்டது சிலாங்கூர்

சிலாங்கூர் அரசு ஹரி ராயா போனஸ் அளிப்பதில் பிஎன் அரசாங்கத்தை மிஞ்சி விட்டது.மாநில அரசு ஊழியர்களுக்கு அரைமாதச் சம்பளத்தை போனசாகவும் அதற்குமேல் ரிம200 சேமிப்புத் தொகையாகவும்  வழங்குகிறது. கூட்டரசு அரசின் போனஸ் ஆகஸ்ட் மாதம் கொடுக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ள வேளையில் மாநில அரசின்…

சிலாங்கூர் ஸபாஷை எடுத்துக்கொள்வதைத் தடுக்கிறது புத்ரா ஜெயா

நீர் விநியோகக் குத்தகை நிறுவனமான ஷரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரை (ஸபாஷ்) சிலாங்கூர் அரசு எடுத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை என்று கூட்டரசு அரசாங்கம் இப்போதைக்கு முடிவு செய்துள்ளது. சிலாங்கூர் ஸபாஷை எடுத்துக்கொள்ள அனுமதிக்குமுன் பல“நடைமுறை” விவகாரங்களைக் கவனிக்க வேண்டியிருப்பதாக சிலாங்கூர் குடிநீர் பிரச்னை மீதான சிறப்பு அமைச்சரவைக் குழு அதன்…

லியு:சிலாங்கூரில் தண்ணீருக்குப் பஞ்சமில்லை

சிலாங்கூரில் உள்ள ஏழு அணைக்கட்டுகளிலும் நீர் நிரம்பி நிற்கிறது என்று கூறிய சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு, வேண்டுமென்றே நீர் நெருக்கடி என்ற ஒன்றை உருவாக்க வேண்டாம் என்று ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரை(சபாஷ்) எச்சரித்தார். மாநில ஊராட்சி, ஆராய்ச்சி,மேம்பாட்டுக்குழுத் தலைவரான லியு, தாமும் பல கிராமத்…

கூடுதல் கூட்டரசு ஒதுக்கீட்டுக்கு சிலாங்கூர் கோரிக்கை

வரிப்பணத்தில் பெரும்பகுதியை வழங்கும் சிலாங்கூர், கூடுதல் கூட்டரசு ஒதுக்கீட்டைப் பெறும் முயற்சிகளை முடுக்கிவிடும். “கூடுதலாகக் கொடுக்கும் மாநிலங்கள் கூடுதலாக பெறவும் வேண்டும்”, என்று மந்திரி புசார் காலிட் இப்ராகிம் இன்று கேள்வி நேரத்தின்போது சட்டமன்றத்தில் கூறினார். சிலாங்கூர், மத்திய அரசுக்கு கிட்டதட்ட ரிம10பில்லியனை வருமான வரியாக வழங்குகிறது ஆனால்…

ராபிஸி, சிலாங்கூர் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொண்டார்

பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் தமது சிலாங்கூர் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். தமக்கு ஒய்வு தேவைப்படுவதால் சிலாங்கூர் பொருளாதார ஆலோசகர் அலுவலத்தில் தலைமை நிர்வாக அதிகாரி என்ற அந்தப் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் சொன்னார். தமது பதவித் துறப்புக்கு "அரசியல் பார்வை" ஏதுமில்லை என…

சிலாங்கூர் இலவசக் கல்வித் திட்டத்துக்கு உதவியாக நிறுவனங்களுக்கு இடையில் நிதிகள்…

இலவச உயர்நிலைக் கல்வியை வழங்கும் சிலாங்கூரின் முன்னோடித் திட்டத்துக்குத் தேவையான 30 மில்லியன் ரிங்கிட்,  MBI என்ற மந்திரி புசார் இணைக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து யூனிசெல் என்ற யூனிவர்சிட்டி சிலாங்கூருக்கு மாற்றி விடப்படும். அதனால் நிதிகளைத் திரட்டுவதற்கு யூனிசெல்-லுக்குச் சொந்தமான நிலத்தை 'விற்க' வேண்டிய அவசியமில்லை  என மாநில பொருளாதார…

சிலாங்கூர் அரசாங்கம், தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது

சிலாங்கூர் மாநில அரசாங்கத் தலைமைத்துவம் இன்று கைகளில் மஞ்சள் நிறத் துண்டுகளை அணிந்து கொண்டு பெர்சே 3.0 பேரணியின் போது பத்திரிக்கையாளர்கள் மீது போலீஸ் காட்டிய முரட்டுத்தனத்தைக் கண்டிக்கும் பல பத்திரிக்கை அமைப்புக்களுடன் சேர்ந்து கொண்டது. மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த நிருபர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மந்திரி…

சிலாங்கூரில் போலியான வாக்களர்களுக்கு எதிரான போருக்கு ரிம5 மில்லியன் செலவிடப்படும்

சிலாங்கூர் மாநில வாக்காளர் பட்டியல் தூய்மையாகவும் முறையாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் மாநில அரசு அதன் அரசு பணியாளர்களையும் கிராமத் தலைவர்களையும் உட்படுத்தும் ஒரு "சிலாங்கூர்கு பெர்சே" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. "இசி (தேர்தல் ஆணையம்) சிலாங்கூர் மாநில வாக்காளர்கள் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதற்கு" இத்திட்டம் உதவும் என்று…

மணல் திருட்டு: பொது விசாரணை தேவை என்கிறார் நோ ஒமார்

சிலாங்கூர் மாநிலத்தில் நிகழ்வதாகக் கூறப்படும் மணல் ஊழல் குறித்து பொது விசாரணை நடத்த மாநில அரசாங்கம் ஒப்புக் கொள்ளுமானால் அதற்கான ஆவணங்களையும் சாட்சிகளையும் வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சர் நோ ஒமார் கூறுகிறார். அந்த விசாரணை செல்காட் என்ற திறமை, பொறுப்பு,…