சிலாங்கூர் நீர் விவகாரத்துக்குப் பேசித் தீர்வு காணலாம் என்று சிலாங்கூர் மந்திரி புசார் விடுத்த அழைப்பைத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் நிராகரித்தார்.
“முகைதின் ‘முடியாது’ என்றார்,அதே வேளையில் அவ்விவகாரத்தில் சட்டத்துறைத் தலைவ(ஏஜி)ரின் ஆலோசனையை நாடப்போவதாகவும் தெரிவித்தார்”, என்று ஊராட்சிக்குப் பொறுப்பாகவுள்ள சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு கூறினார்.
விவகாரத்தை ஏஜி இன்னும் ஆராய்ந்து வருவதாகவும் இதுவரை அதன்மீது கருத்துத் தெரிவிக்கவில்லை என்றும் முகைதின் கூறியதாகவும் லியு தெரிவித்தார்.
கடந்த வாரம் மலேசியாகினிவுடனான நேர்காணல் ஒன்றில் சிலாங்கூர் நீர் விவகாரம் தொடர்பில் முகைதினுடன் பேச்சு நடத்தப்போவதாக காலிட் குறிப்பிட்டிருந்தார்.
சிலாங்கூர் விரும்புவதுபோல் நீர் நிர்வாகத்தைத் திருத்தி அமைக்க மத்திய அரசு உடன்பட்டால், அந்நடவடிக்கையில் லங்காட்2 நீர் சுத்திகரிக்கும் ஆலை அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தையும் சேர்த்துக்கொள்ள தாம் தயார் என்று காலிட் கூறினார்.