அன்வார் இப்ராஹிமின் வலது கரம் எனக் கருதப்படும் முகமட் அஸ்மின் அலி பிகேஆர் கட்சியிலிருந்தும் பக்காத்தான் ராக்யாட் கூட்டணியிலிருந்தும் வெளியேறுவதற்குத் தயாராகி வருவதாகச் சொல்லப்படுகின்றது.
“பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் சிலாங்கூர் ஆட்சி மன்ற இடங்கள் ஒதுக்கீடு குறித்து மனநிறைவு கொள்ளாததால்” அவர் கூட்டணியிலிருந்து விலக விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்றத்துக்குப் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 11 மூத்த பக்காத்தான் புள்ளிகளும் அவருடன்
வெளியேறுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.
கிளானா ஜெயாவில் நேற்றிரவு நடைபெற்ற மாபெரும் பக்காத்தான் பேரணியில் அஸ்மின் கலந்து
கொள்ளவில்லை. அந்த நிகழ்வு பற்றி அஸ்மின் டிவிட்டரில் தமது எண்ணங்களை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் முடிந்த 13வது பொதுத் தேர்தலில் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஏற்றுக் கொள்ளுமாறு பக்காத்தானைக் கேட்டுக் கொண்டதுடன் அதற்கு ஏற்பாடு செய்ததற்காக பக்காத்தானையும் அஸ்மின் அதில் சாடியுள்ளார்.
அஸ்மின் டிவிட்டர் தகவல்: “Rakyat letih dengan asakan politik melampau. Terima hukuman, muhasabah diri,
akui kelemahan, maju ke hadapan, tumpu rakyat bukan kerabat.”
(மக்கள் மிதமிஞ்சிய அரசியல் நெருக்குதலினால் களைப்படைந்து விட்டனர். தண்டனையை ஏற்றுக்
கொள்ளுங்கள். உங்களை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள், பலவீனத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்,
முன்னேறுங்கள், மக்கள் மீது கவனம் செலுத்துங்கள் உறவினர்கள் மீது அல்ல)
அஸ்மின் புதிய சிலாங்கூர் மந்திரி புசாராவதற்குப் போராடுகின்றவர்களில் ஒருவர் எனக் கருதப்படுகின்றது.
பாஸ் கட்சியின் அகமட் யூனுஸ் ஹாய்ரி உட்பட பலரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
என்றாலும் நடப்பு மந்திரி புசார் காலித் இப்ராஹிம் பக்காத்தான் தலைமைத்துவத்தின் தேர்வு எனக் கூறப்படுகின்றது.
அஸ்மினுடன் தொடர்பு கொள்ள யாகூ மலேசியா முயற்சி செய்தது. ஆனால் இதுவரை பலனில்லை.
‘பிகேஆர் கட்சி மீதான பொது மக்களுடைய நம்பிக்கையைச் சீர்குலைக்கக் கூடிய ‘உறவினர்களுக்கு உதவும்’ போக்கிலிருந்து அந்தக் கட்சியைக் காப்பாற்றுவதற்காக’ தாம் விரும்புவதாக அஸ்மின் சொன்னார் என சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
இதர நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தாம் கட்சியிலிருந்து விலகத் தயாராகி வருவதாக கூறும்
வதந்திகளையும் அவர் மறுத்தார்.
“இந்த புனிதமான போராட்டத்தை நான் கைவிட மாட்டேன். அத்துடன் மாற்றத்தை விரும்பும் மக்களுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்யவும் மாட்டேன்,” என்றார் அஸ்மின்.
-யாகூ! மலேசியா
ஆரம்பத்திளிரிந்தே இவர் மீது ஒரு சந்தேகம் உண்டு.அதுமட்டுமல்ல அனுவாருக்கு பிறகு பி கே ஆரை வழி நடத்த இவருக்கு திறமை போதாது. இவரை பி என் எழிதில் வாங்கிவிடும்.
பக்கத்தான் தலைவர்களே, பாரிசான் மீது ஏற்பட்ட வெறுப்பினால் அந்தக் கட்சியை வெறுத்து ஒதுக்கிய மக்கள் இப்போது உங்களை மலைபோல் நம்பியிருக்கிறார்கள். உங்கள் குடுமிப்பிடிச் சண்டையில் பக்கதானை உடைத்து பாரிசான்காரன் ஏகத்துக்கு கொண்டாட்டம் போடுவதற்கு வாய்ப்பு தந்து விடாதீர்கள்
நன்றி அஸ்மின் அலி அவர்களே… கட்சியில் பிரச்சனைகள் இருக்கலாம்.. ஆனால் கொள்கை ஒன்றாக இருக்க வேண்டும்… அதுதான் முக்கியம்…
நிலைமை இப்படி இருக்க அவர்கள் ஆட்சியை பிடித்திருந்தால் எப்படி ஒரு அரசாங்கத்தை இவர்களால் வழிநடத்திச் செல்ல முடியும்?
பதவி ஆசை யாரை விட்டது.சுயநலம் கருதாமல் மக்களை முன் நிறுத்தி போராடுவதில் யார் முதன்மை வகிக்கிறார்கள் ?பி என் னா நீங்களா. போக போக தெரியும்?.அதற்க்கு தானா எதிர் கட்சியாக இருந்து இப்படி போராடுகிறீர்கள்?
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.தொடர்ந்து மக்கள் மத்தியில் உறவாடுங்கள்.அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுங்கள்.எல்லாம் உங்களை நாடி வரும்.
இந்த நாட்டில் நடக்கிற அநியாயம், அக்கிரமும் பார்த்தால் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது . வாக்கு சீட்டு பெட்டி சட்டத்திற்குப் புறம்பாக இரவு 10 மணிக்கு மேல் கொண்டுவரப்பட்டது, இது நானும் கேள்விப்பட்டு ,ஏன் வீடியோவிலும் பார்த்தும் இருக்கிறேன் ..இன்னும் சில அநியாயமும் நடந்துள்ளன.. நம் நாட்டில்லா இப்படியெல்லாம் நடக்கின்றன என வியப்பா இருக்கு ..! இந்த அதிகாரிக்கெல்லாம் எப்படி இவ்வளவு தைரியம் வந்தது ..? யார் கொடுத்தது ..? எல்லாம் தெரிந்திருந்தும் ஒன்றும் பண்ண முடியவில்லையே இதை விடக்கொடுமை என்ன இருக்கு.. தல சரியாய் இருந்தால்தானே வாழுங்க எல்லாம் ஒழுங்காய் இருக்கும் ..இங்க தலையே அட்டுழியம் பண்ணுது.. கடவுள்தான் நியாயம் கேட்கனும்..!
ஹஸ்மின்,எப்ப பாத்தாலும் பிரசைனைதான் அவருக்கு பதவி ஆசை வந்துரிச்சி.இனி தலை வலி பக்கதன்னுக்குதன்…