பினாங்கு சட்டமன்றத் தலைவராக சீனர் ஒருவர் நியமனம்

1 penangபினாங்கு சட்டமன்றத்துக்கு முதல்முறையாக சீனர் ஒருவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

பினாங்கு பிகேஆரின் மாநில துணைத் தலைவர் லாவ் சூ கியாங் சட்டமன்றத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருப்பதை அக்கட்சியின் மாநிலத் தலைவர் மன்சூர் ஒஸ்மான், உறுதிப்படுத்தினார். டேவான் ஸ்ரீபினாங்கில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் மன்சூர் செய்தியாளர்களிடம் பேசினார்.

1 penang1லாவ் பினாங்கின் முதலாவது சீன சட்டமன்றத் தலைவர் ஆகிறார் என்று குறிப்பிட்ட மன்சூர், பெனாந்தி சட்டமன்ற உறுப்பினர் நோர்லேலா அரிப்பின் துணைச் சட்டமன்றத் தலைவராக இருப்பார் என்றும் தெரிவித்தார்.

மாநில ஆட்சிக்குழுப் பட்டியலை லிம் குவான் எங் முழுமையாக ஏற்றுக்கொண்டாரா அதன்மீது சர்ச்சை எழுந்ததா என்று செய்தியாளர்கள் கேள்விக்குமேல் கேள்வி கேட்டு மன்சூரைத் துளைத்தெடுத்தனர்.

ஏனென்றால், பதவியேற்பு நிகழ்வுக்குமுன், ஆட்சிக்குழுவில் லாவ் இடம்பெறாததால் பிகேஆர் தலைவர்கள் ஆத்திரமடைந்திருப்பதாகவும் அதனால் அந்நிகழ்வைப் புறக்கணிப்பர் என்றும் வதந்திகள் உலவின.

அவற்றை ஒதுக்கித்தள்ளிய மன்சூர், ஆட்சிக்குழுப் பட்டியல் அருமையாக உள்ளது என்றும் ஆட்சிக்குழு பினாங்குக்குச் சிறப்பாக சேவை செய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

“பினாங்கு கடந்த காலத்தில் பல துறைகளில் முன்னணியில் இருந்தது. இந்தத் தவணையிலும் அது வேறு பல துறைகளில் முன்னணி வகிக்கும் என்பது நிச்சயம்”, என்று நிபோங் தெபால் எம்பியுமான மன்சூர் குறிப்பிட்டார்.

“சில வேளைகளில், பதவி கிடைக்காதது தலைவர்கள் சிலருக்குக் கசப்பாக இருக்கலாம். ஆனால், தலைவர்கள் அதை ஏற்றுக்கொண்டு பணியைத் தொடர வேண்டும்”, என்றவர் வலியுறுத்தினார்.

ஆட்சிக்குழுவில் சீன பிகேஆர் உறுப்பினர்கள் இல்லை

1 penang2இதனிடையே, ஆட்சிக்குழுவில் இடம்பெற்றுள்ள பிகேஆர் உறுப்பினர்களில் சீனர் பிரதிநிதித்துவம் இல்லை என்பதால் பிகேஆர் சீனத் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால், பிகேஆர் பாயான் பாரு எம்பி சிம் ட்ஸே ட்ஸின்(வலம்) அப்படிப்பட்ட வாதத்தில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றார்.

“ஆட்சிக்குழு உறுப்பினர்கள் எல்லா இனங்களுக்கும் சேவை செய்வார்கள். ஆட்சிகுழு இனத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல”,என்றார்.

திறமையின் அடிப்படையில்தான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றவர், “பிகேஆர் பல இனங்களையும் கொண்ட கட்சி”, என்றார்.

TAGS: