பிஎன் -னுக்கு இந்தியர் ஆதரவு கூடியிருப்பதாக சொல்லப்படுவதை அண்மையில் யூனிசெல் எனப்படும் Universiti Selangor நடத்திய கருத்துக் கணிப்பு காட்டியுள்ளது.
பக்காத்தான் ராக்யாட்டுக்கான மலாய்க்காரர் சீனர் ஆதரவு கூடியுள்ளதற்கான அறிகுறிகள் தென்படும் வேளையில் இந்திய சமூகத்தின் போக்கு அதற்கு நேர்மாறாக உள்ளதை அந்த ஆய்வு காட்டியுள்ளது.
சிலாங்கூரைச் சேர்ந்தவர்களிடம் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பேட்டி காணப்பட்ட சீனர்களில் 69 விழுக்காட்டினரும் மலாய்க்காரர்களில் 61.6 விழுக்காட்டினரும் மலேசியாவில் மிகவும் பணக்கார மாநிலமான சிலாங்கூரைத் தக்க வைத்துக் கொள்ளும் எனக் கருதுகின்றனர்.
என்றாலும் பக்காத்தான் அந்த மாநிலத்தை தக்க வைத்துக் கொள்ளும் என பேட்டி காணப்பட்ட இந்தியர்களில்
50 விழுக்காட்டினர் மட்டுமே நம்புகின்றனர்.
சிலாங்கூர் மக்களிடையே பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீதான நம்பிக்கை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளும் அந்தப் போக்கை உறுதி செய்துள்ளன.
மலாய்க்காரர்களில் 51.2 விழுக்காட்டினரும் சீனர்களில் 34.5 விழுக்காட்டினரும் நஜிப்பை ஏற்றுக் கொண்ட வேளையில் இந்தியர்களில் 71.6 விழுக்காட்டினர் நஜிப்பின் தலைமைத்துவப் பண்புகள் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சிலாங்கூரில் பல்வேறு இடங்களில் மொத்தம் 1,015 பேர்களிடம் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அந்தக் கருத்துக் கணிப்பில் உண்மை இருக்கலாம். உற்று நோக்கினால் ஒரு உண்மை புலப்படுகிறது. இந்தியர்களின் மேல் தொடர் தாக்குதல் மேற்கொள்ளப் படுகின்றன. பத்திரிகைகள் அனைத்திலும் பாரிசான் ஆதரவு செய்திகள். அவைகள் பொய்ச் செய்திகள் என நமக்குப் புரிகிறது. ஆனால் பத்திரிக்கைகள் உண்மைச் செய்திகளைப் போட அனுமதியில்லை. பொய்யை உண்மை உண்மை என்று அடித்துச் சொல்லப்ப் படுகிறது. வெளியிடும் செய்திகளில் உண்மை இல்லை! எல்லா ஊடகங்களிலும் ம.இ.கா.வின் ‘சாதனைகள்’ சத்தம் போட்டுச் சொல்லப் படுகின்றது. எந்த சாதனையுமே செய்யாமல் வெறும் பொய்யையே சாதனைகளாக போற்றப் படுகின்றது! ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்தியர்களின் ஓட்டு இனி வைப்புத் தொகை அல்ல. அடி விழுந்தது விழுந்தது தான்! இந்தப் பொய்களினால் நஜிப்புக்கு ஆதரவு கிடைக்கலாம். ஆனால் ம.இ.கா.வுக்கு இதனால் பயன் இல்லை!
இந்தியர்கள் எந்தக்காலத்தில் ஒற்றுமையாக இருந்திருக்கிறார்கள்.சேரன்,சோழன்,பாண்டியன் முதல் இன்று வரை பிரிந்து தானே இருக்கிறார்கள்.இந்த லட்சணத்தில் தமிழன்,தெலுங்கன்,மலையாளி,சீக்கியன் என்று நான்கு திசைகளில் பிரிந்து இருக்கிறான்.பிறகு MIC,MIUC,IPF.1,2,3,.MAKKAL SAKTHI, HINDRAF,HINDRAFMAKKAL SAKTHI, இதற்க்கு மேலும் இன்னும் பல கட்சிகள் ஆளுக்கொரு திசையாக இருக்கும் போது எங்கிருந்து உருப்படுவது.
இந்தியர்கள்
இவ்வளவு முட்டாள்னு
நான் நினைக்கவில்லை
இந்தியர்கள்
இவ்வளவு முட்டாள்னு
நான் நினைக்கவில்லை
55 வருடம் நாம்
ஏமாந்து
விட்டோம்
. இன்னுமுமா? இந்தியர்களை எந்த கடவுளாலும் காப்பாத்த முடியாது
ஒளி மயமான எதிர்காலம் என்று எண்ணி எதிர் கட்சிக்கு ஒட்டு போடுவோம். அரிசிக்கும் பருப்புக்கும் அவன் கொடுக்கும் ஐநூறு வெள்ளி காசுக்கும் எலும்பு துண்டுக்கும் வால் ஆட்டும் ….யை போல் இல்லாமல், நிமிர்ந்து நில் தமிழா! தன் மானம் உள்ளவன் எல்லாவற்றையும் சீர் தூக்கி பார்ப்பான்!. நம் எதிர் கால சந்ததியினரை நினைத்து பார்!. அரசாங்க கஜானா காலி ஆயிடும் வரை அள்ளி கொடுக்கும் பிரதமரை ஆதரிப்பவன் மடையன். வாய்மை வெல்லும். எதிர் கட்சிக்கு ஒரு வைப்பு கொடுத்து பார். வந்தே மாதரம்.
யூனிசெலின் கருத்துக்கணிப்பு ஏற்புடையதல்ல.இந்தியர்கள் ஆட்சியை மாற்றியே ஆகவேண்டும் என்று எண்ணி இருக்கும் இந்த வேலையில் இப்படி ஒரு கருத்துக்கணிப்பை Unisel வெளியிடுவதில் உண்மை இல்லை என்பதை இந்தியர்கள் உணரவேண்டும்.ஏமாறாதே ஏமாறாதே;ஏமாற்றாதே ஏமாற்றாதே.
இந்தியர்கள், வயதானவர்கள் இன்னமும் than என்னத்தை மாற்ற மாறுகிறார்கள் , ரூபாஹ் 500 கொடுத்தது இது அவர்களுக்கு தேவன் நே கொடுத்தது போல் நினைகிர்ரர்கள், இது ஏன் என்றால், அடிமைத்துவ வாழ்க்கை , இப்படி நாமை வாழ வைத்தது யார், உங்களுக்கே தெரியும் , எதுவும் வேண்டுமானால், நம் மண்டோரிடம் கூற வேண்டும் , ( MIC President) பிறகு அவர் சென்று பிரதமரிடம் சொல்ல வேண்டும், எல்லாமே கேட்டு போராடி தான் பெற முடிகிறது
இப்படியான அடிமை வாழ்க்கையை அமைத்து வைத்திருகிறார்கள் நம் இந்திய தலைவர்கள் , எதிர் கட்சி அரசியல் பொது கூட்டம் என்றால் அது முக்கியமல்ல , TV யில் சிரில் காட்சி என்றால் அதை பார்த்து வாழ்கையை வீணாக்குவார்கள், திருந்துங்கள் , மாறுங்கள் வென்று இறைவனை வேண்டுவோம்
என்ன இப்படி சொல்லிடீங்க சிவா.இந்தியர்களுக்கு என்று சுயபுத்தி இருந்திருக்கின்றது.எவனாவது எலும்பு துண்டைத் தூக்கி வீசினால் அதைக் கவ்விக் கொண்டு நன்றி விசுவாசமாக இருப்பான்.எதிர்காலத்தைப் பற்றி இவனுக்கு என்ன கவலை?சுரண்டும் கூட்டங்களையும் கொள்ளையிடும் பண்ணாடைகளும் இவர்களுக்குச் சிறந்த தலைவர்கள். மக்கள் பணம் மக்களுக்கே என்று முழங்கும் பக்காத்தான் தலைவர்கள் ஏமாற்றுக்காரர்கள்.எண்ணெய் விலை குறைத்தால் எனக்கென்ன?இலவசக்கல்வி கொடுப்பதனால் எனக்கென்ன பயன்?வாகன வரியைக் குறைப்பதால் எனக்கென்ன லாபம்?எனக்கு வேண்டியது இலவச அரிசி.பருப்பு,500 ரிங்கிட்..இப்படி இருக்கும் இவர்களிடம் என்ன சொல்வது
நாம் முட்டாள்கள் மட்டும் அல்ல முதுகு எழும்பில்லா முட்டாள்கள் -56 ஆண்டுகள் நம்மை இந்நில்லைக்கு ஆளாக்கிய ஈன ஜென்மங்களுக்கு இன்னும் ஆதரவு தரும் துரோகிகள் ஏராளம்.நம் இனம் காட்டிகொடுக்குமினம்—வெட்ககேடு- நம்முடைய சாபம்
கடந்த காலத்தில்
ஏற்பட்ட கொடுமைகளை மறந்த நிலை மீண்டும் ஏற்படகூடாது. இந்தியர்கள் வெறும் நம்பிக்கை, மறுப்பிரவி
போன்ற வார்த்தைகளை நம்பி மேலும் எமார கூடாது.
இப்போதும் நம்மேவர்களுக்கு RTM அங்கங்கே
கலைநிகல்சிகளை கொடுத்தால்
இந்தியர்களுக்கு
போதும் என்று நம்புகிற BN க்கு
சரியான சவுக்கடி
கொடுக்க
வேண்டியது நம் கடமை. போன தெர்தல்லில்
TV2 காலையில்
தமிழ் படங்களை போட்டு நம்மை
திசைதிருப்பிய திட்டத்தை மறக்கக்கூடாது.
5 கிலோ அரிசி பாரிசான் கொடுத்தான் ,பாகாதான் என்ன கொடுத்தான் என்று இந்தியன் என்னிடமே கேட்கிறான், அவ்வளவு அறிவாளிகள் .
71.6 விழுக்காடு உண்மையாகத்தான் இருக்கும்
இந்தியர்களுக்கு ஒரு நூறு அரசியல் /அரசியல் சார்பு கட்சிகளும்
சங்கங்களும் …இன்னும் பல பல மன்றங்களும் …
அவற்றுக்கு ஒரு நூறு சுய நலம் பேணும் ( பெயருக்கு )தலைவர்களும்
என இருந்தால்…, அவர்களை இந்த ஏமாளி சமூகம் தலைமேல்
வைத்து கொண்டாடினால் …வேறு என்ன வேண்டும் ???
அவன் அவன் தனித்தனியே அம்னோ தலைமையிடம் புலம்பி
அவனவன் வேண்டுவதை மறுகைக்கு தெரியாமல் பெற்றுக்கொண்டு
வெளியே வந்து மகா உத்தமமான காரியம் நிகழ்த்திவிட்டதாக
விடும் அறிக்கை …!!!
என் ஏமாளி மக்களே உங்களுக்கு ஒரு கட்சி …
ஒரு தலைவன் (அவனும் அவன் சுற்றமும் கோடீஸ்வரர்களாக )
உங்களை ஓட்டாண்டி யாக அலையவிட … வேண்டுமா …???
56 ஆண்டுகளாக உங்கள் உழைப்பு … உங்கள் சிரமம் …நீங்கள்
தேடிய செல்வம் …அதை நீங்கள் நலமே காப்பாற்றினால்
உங்கள் வாழ்வு உயரும் !
அதை ஏன் இந்த ஏமாற்று தலைமையை நம்பி பாழ் பண்ணுகிறீர்கள் !???
இனி நமக்கு தலைமை வேண்டாம் .!
புதியதோர் உலகம்/ நாடு மலர புறப்படுங்கள் !
கொட்டக்கொட்ட குனிந்தது போதும் !
தேர்தலுக்கு முன்பு வரை மக்கள் கூட்டணிக்கு அதரவு தெரிவித்து விட்டு, தேர்தலுக்கு தேதி குறித்த பிறகு தே.மு. ஒரு நாள் சேவைக்கு கொடுக்கும் RM50/= -க்காக தே.மு. கொடி கட்டும் வேலைக்கும், நடவடிக்கை மையங்களை அமைத்து துதி பாடும் இந்தியர்களை என்ன செய்வது. இதற்கு மேலும், இந்திய பாமர மக்களை நம்பி பிரியோசனம் இல்லை! தேர்தலுக்கு பிறகு படப் போகும் வேதனைக்குத் தயாராக இருங்கள் இந்தியர்களே!
ஒருத்தன் இன வெறியனை தன் கட்சியில் நிட்கவட்சிதான், இன்னொருத்தன் இந்தியர் quota வில் அப்பனும் மகனும் அமைச்சர் ஆகி தமிழ் பள்ளிகளை ஹிந்தி பள்ளிகளா மாறாம இருந்தா சரி. நம்மவர்கள் போஸ்டர் ஓட்டுபவர மட்டும் இல்லாமே, எந்த கட்சிக்கு ஓட் போட்டாலும் அந்த கட்சி நம்மவருக்கு முக்கிய பதவி மற்றும் மதிப்பு தரும் கட்சி ஆகே இருக்கனும். வொடெபோடும் முன்பு confirm பண்ணிகுங்கே, பின்னாலே எமராமே இருக்கோணும்.
மனம் தளராதீர்கள் சகோதரர்களே….இந்த யுனிசெல் கணிப்பு கூட ஒரு கண்கட்டு வித்தைதான்.
வரும் தேர்தலில் இந்த MIC, PPP, IPF, JKR, PWD மண்டோர்களுக்கு எல்லாம் சேர்த்தாற்போல் ஒரு ஆப்பு வையுங்கள். இனி எவனாவது புதிதாக கட்சி, உண்ணாவிரதம் என்று வந்தால், அதுவும் கோவிலில் வந்து அரசியல் பேசினால் கண்டு கொள்ளாதீர்கள். பட்ட வேதனைகள் போதும். பிள்ளைகளை நன்கு படிக்க வையுங்கள். அரசியல்வாதிகள் பின்னால் செல்லும் சோம்பேறிகள் எவனையும் மதிக்காதீர்கள். குடும்ப பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ள என்னென்ன வழிகள் என்று யோசியுங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒருவராவது சொந்த தொழில் அல்லது வியாபாரம் செய்ய ஆதரிக்க முனையுங்கள். வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை நம் தாய்த் திருநாட்டில்?
மாயவர்மன்,நீங்கள் சொன்னதுதான் 100 சதவீதம் உண்மை.அனைத்து இந்தியர்களும் இதை உணரவேண்டும்.இப்படி ஒரு சூழலுக்கு இடம் வகுத்து ஆளுக்கொரு மூலையில் இருந்து போராட்டம் நடத்தி பச்சை கேட்கும் ,ஒற்றுமை இல்லா சமுதாயம் என்ற பேரையும் வாங்கி கொண்டு படுகுழியில் தள்ளப்பட்டு விட்டோம்.
காரணம் இந்த அம்னோ ,பி என் அரசு.
இங்கே தமிழர்களின் நிலை தான் படு மோசம்.
போதிவர்மர் சொல்ல்வது உண்மை..கிள்ளானில்
வசிக்கும் நான் யாரிடமும் கேட்டால் அவர்கள் ஒட்டு பக்கடனுக்கு என்றுதான் சொல்கிறர்கள்…வெளிவேசம் கட்டும் bn அதர்வாலர்களை
யாரும் நம்பவில்லை..இதுதான் உண்மையான நிலவரம்