பக்காத்தான் கொள்கை அறிக்கைக்கு ‘சித்திர விளக்கம்’

1cartoon

கேலிச்சித்திர ஓவியர்கள் ஒரு குழுவாக அமைந்து பக்காத்தானின் தேர்தல் கொள்கை அறிக்கையைச் விளக்கச் சித்திரங்களாக்கி நாடு முழுக்கக் கொண்டு செல்வர்.

“நாங்கள் அனைவரும் சுயேச்சையாக செயல்படும் கேலிச் சித்திர ஓவியர்கள். தனிப்பட்ட முறையில்தான் இதைச் செய்கிறோம். பணத்துக்காக செய்யவில்லை, எந்தவொரு கட்சியும்  இதைச் செய்ய வேண்டும் என உத்தரவிடவும் இல்லை”, என சுயேச்சை கேலிச்சித்திர ஓவியர் குழுத் தலைவர் சுல்கிப்ளி எஸ்எம் அன்வார் உல்ஹாக் கூறினார்.

1cartoon1“பக்காத்தான் ரக்யாட் தேர்தல் கொள்கை அறிக்கையை ஆதரிப்பது என்று முடிவு செய்தோம். எந்தவொரு கட்சிக்காகவும் அல்லாமல் மக்களுக்காக அதை ஆதரிக்க முடிவு செய்தோம்”, என்று  ஜூனார் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் சுல்கிப்ளி பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் தெரிவித்தார்.

அக்குழுவில் இடம்பெற்றுள்ள 35 கேலிச்சித்திர ஓவியர்களும் தேர்தல் கொள்கை அறிக்கை கூறும் செய்திகளை விளக்கப்படங்களாக வரைந்துள்ளனர்.

அவ் விளக்கப்படங்களை டி-சட்டைகளிலும் சிறு கையேடுகளிலும் பதித்து பக்காத்தான் தேர்தல் கொள்கைகளைப் பரப்புவது அவர்களின் திட்டமாகும்.

அத்திட்டத்தை பகாங், பேராக், மலாக்கா ஆகியவற்றில் ஏற்கனவே தொடங்கியாயிற்று என ஜூனார் கூறினார்.

“அடுத்த வாரம் தாமான் தித்திவங்சாவில் அவற்றைக் காட்சிக்கு வைப்போம்”, என்றாரவர். அதற்கென அவர்கள் ஒரு வேனையும்  வைத்திருக்கிறார்கள்..

TAGS: