டிஏ ஆய்வு நிறுவனம்: பக்காத்தான் வெற்றி என்பது குறுகிய கால இழப்பு, நீண்ட கால ஆதாயம்

anwarஅரசாங்க மாற்றம் பங்குச் சந்தையில் ‘இழப்பை’ தரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் பக்காத்தான்  ராக்யாட் கொள்கைகள் வெற்றிகரமாக அமலாக்கப்பட்டால் பொருளாதாரம் மீது சாதகமான விளைவுகள்  ஏற்படும் என டிஏ ஆய்வு நிறுவனம் சொல்கிறது.

“பக்காத்தன் தெரிவித்துள்ள நடவடிக்கைகள் அவற்றின் நோக்கங்களில் வெற்றி கண்டு வாக்குறுதி அளிக்கப்பட்ட  விளைவுகளை அளித்தால் அது நீண்ட கால அடிப்படையில் பொருளாதாரத்திற்கும் மூலதனச் சந்தைக்கும் சாதகமாக இருக்கும்,” என அதன் அறிக்கை தெரிவித்தது.

“பெரும்பாலான பலவீனங்களை (பக்காத்தான் முன் மொழிந்துள்ள கொள்கைகளில் கூறப்பட்டுள்ளவை) நடப்பு நிர்வாகம் அறிந்து போதிலும் அவற்றில் சில பிரச்னைகளைத் தீர்க்க எடுத்துள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தரவில்லை.”

anwar1என்றாலும் பிஎன் -னுக்கு வலுவான அதிகாரம் வழங்கப்பட்டால் “மாற்றத்துக்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்பை முறியடிக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு வலிமை கொடுக்கும், நல்ல விளைவுகள் ஏற்படும்” என்றும் டிஏ ஆய்வு நிறுவனம் கூறியது.

அது பொருளாதாரத்துக்கு நன்மைகளைக் கொண்டு வரும். நஜிப் அமலாக்கியுள்ள பொருளாதார உருமாற்றத் திட்டம் இந்த நாட்டில் தனியார் முதலீடுகளில் பெருத்த ஏற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக அது குறிப்பிட்டது.

இவ்வாண்டு இரண்டாவது கால் பகுதியில் நிகழும் ‘பெரிய நிகழ்வு’ எனப் பொதுத் தேர்தலை வருணித்த அது, நாடாளுமன்றத்தில் பிஎன் -னுக்கு 120 முதல் 125 இடங்கள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கின்றது. 2008ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை குறைவான பெரும்பான்மை ஆகும்.

நெகிரி செம்பிலான் தவிர மற்ற மாநிலங்களில் அதே நிலை தொடரும் என அந்த ஆய்வு நிறுவனம் எதிர்பார்க்கிறது.

“பாரிசான் நேசனுலுக்கான வெற்றி 2008-ஐ காட்டிலும் மோசமானதாக இருந்தால் தலைகள் உருள வேண்டும் என அம்னோவில் உள்ள பல முதிய உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதால் அந்தக் கட்சியில் தலைமைத்துவம்  மாற்றம் இருக்கும்.”

பங்குச் சந்தை குறியீட்டில் பெரிய ஏற்ற இறக்கங்கள் என்றும் அது எதிர்பார்க்கவில்லை. பெரும்பாலும் 1,699 ஆக குறியீடு இருக்கும்.”

TAGS: