முகமட் ரஷீட் ஹாஸ்னோன் பினாங்கு மாநில புதிய முதலாவது துணை முதலமச்சரானார்

Penangபினாங்கு மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தேவான் ஸ்ரீ பினாங்கில் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக்  கொண்ட பின்னர் பிகேஆர் பந்தாய் ஜெரஸாக் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ரஷீட் ஹாஸ்னோன் புதிய  முதலாவது துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அவர், நிபோங் தெபால் எம்பி-யாக தேர்வு பெற்றுள்ள மாநில பிகேஆர் தலைவருமான மான்சோர்  ஒஸ்மானுக்குப் பதில் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

பிராய் சட்டமன்றத் தொகுதியில் 2008ம் ஆண்டைக் காட்டிலும் அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பி  ராமசாமி தொடர்ந்து இரண்டாவது துணை முதலமைச்சராக நிலை நிறுத்தப்பட்டுள்ளார்.

2013ம் ஆண்டுக்கான பினாங்கு ஆட்சி மன்ற உறுப்பினர்களும் அவர்களுடைய துறைகளும்

1. லிம் குவான் எங்- நில விவகாரம், நில மேம்பாடு, தொழில் முனைவர் மேம்பாடு, தகவல்

2. ரஷீட் ஹாஸ்னோன் தொழிலியல் மேம்பாடு, அனைத்துலக வாணிக, கூட்டுறவு, சமூக உறவுகள்

3. பி ராமசாமி- மாநில பொருளாதாரத் திட்டப் பிரிவு, கல்வி, மனித வளங்கள், அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம்penang1

4. சாவ் கோன் இயாவ்- ஊராட்சி மன்றம், போக்குவரத்து நிர்வாகம்

5. லிம் ஹொக் செங்- பொதுப் பணி, பயனீடுகள்,

6. அப்துல் மாலிக் காசிம்- சமய விவகாரம், உள்நாட்டு வாணிகம், பயனீட்டாளர் விவகாரம்

7. டாக்டர் அபிப் பஹார்டின் விவசாய, விவசாய அடிப்படைத் தொழில்கள், சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு,  வெள்ளத் தடுப்பு

8. டேனி லாவ் ஹெங் கியாங்- சுற்றுலா மேம்பாடு, பண்பாடு, கலை, பாரம்பரியம்

9. பி பூன் போ- சமூக நலன், பரிவுள்ள சமூகம், சுற்றுச்சூழல்

10. ஜக்தீப் சிங் டியோ- நகர கிராமப்புற திட்டம், வீடமைப்பு

11 சொங் எங்- இளைஞர், விளையாட்டு மகளிர் சமூக மேம்பாடு

TAGS: