பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
‘UEC சான்றிதழை இப்போதே அங்கீகரியுங்கள், தேர்தல் பிரச்சாரத்தின் போது அல்ல’
UEC என்ற ஐக்கிய தேர்வு சான்றிதழை உடனடியாக அங்கீகரிக்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை பக்காத்தான் ராக்யாட் கேட்டுக் கொண்டுள்ளது. பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குகளை வாங்குவதற்கான தந்திரமாக அதனைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அது கூறியது. பொதுப் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுச் சேவைக்கும் நுழைவுத் தகுதியாக அந்த…
பக்காத்தான், கூட்டுக் கொள்கை விளக்க அறிக்கையை அடுத்த வாரம் வெளியிடும்
எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் மாற்றரசுக்கட்சியான பக்காத்தான் ரக்யாட் அடுத்த வாரம் அதன் கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டு தேர்தல் பரப்புரையைத் தொடங்க ஆயத்தமாகிறது. “கொள்கை விளக்க அறிக்கை வெளியிடப்படுவது 13வது பொதுத் தேர்தல் பரப்புரையின் தொடக்கமாகவும் அமையும்.”, என்று கூறிய பிகேஆர் வியூக…
பக்காத்தான் இண்ட்ராபின் செயல்திட்டத்தை ‘இன்னமும் பரிசீலிக்கிறது’
பக்காதான் தலைவர்கள் இண்ட்ராபின் செயல் திட்டத்தை “அமலாக்கத்தக்கக் கொள்கைகளாகவும் சட்டத் திருத்தங்களாகவும்” மாற்றும் வழிமுறைகளை இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். பக்காத்தான் “கொள்கை அளவில்” ஆதரிக்கும் அத்திட்டம் நிராகரிக்கப்படவில்லை என்று பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார். “செயல்திட்டம் எங்களின் தேர்தல் கொள்கை அறிக்கையுடன் ஒத்துப்போக வேண்டும். இல்லையேல்…
பாக்கத்தான் வெற்றி பெற்றால், துங்கு ரசாலி பிரதமரா?
அடுத்த பொதுத் தேர்தலில் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றினால், குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினரான துங்கு ரசாலி பிரதமர் பதவிக்கு பாக்கத்தானின் வேட்பாளராக இருப்பார் என்ற வதந்தியை அக்கட்சி இன்று மறுத்தது. எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அந்த வதந்திகளை அம்னோவுக்கு சொந்தமான ஊடகங்களின் வேலை என்று வர்ணித்தார். "இது…
பக்கத்தானில் இணைவதற்கான பிஎஸ்எம் மனு மீது விரைவில் முடிவு எடுக்கப்படும்
பக்கத்தான் கூட்டணியில் இணைவதற்கு மலேசிய சோசலிசக் கட்சி செய்திருந்த மனு மீது பக்கத்தான் ரக்யாட் தலைமைத்துவ மன்றம் விரைவில் முடிவு எடுக்கும் என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கூறினார். பக்கத்தான் கூட்டணியின் மூன்று பங்காளிக் கட்சிகளின் தலைமைச் செயலாளர்கள் அடங்கிய பக்கத்தான் ரக்யாட் செயலகத்தின் கவனத்திற்கு…
பக்காத்தானில் சேர்வதற்கு பிஎஸ்எம் செய்த விண்ணப்பத்துக்கு இதுவரை ‘பதில் இல்லை’
பார்டி சோசலிஸ் மலேசியா (பிஎஸ்எம்) பிஎன் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் குறிக்கோளில் பக்காத்தான் ரக்யாட்டில் சேர கடந்த ஆண்டு விண்ணப்பம் செய்தது. ஆனால், அதற்கு இதுவரை பதில் இல்லை. கடந்த ஜூனில், அதன் முடிவை வாய்மொழியாக பக்காத்தானிடம் தெரிவித்த பின்னர் மூன்று மாதம் கழித்து முறையாக விண்ணப்பம்…
ஜனவரி 12 பேரணி மிகவும் அமைதியாக இருக்கும் என பக்காத்தான்…
எதிர்வரும் மக்கள் எழுச்சிப் பேரணி ( Himpunan Kebangkitan Rakyat ) இது வரை நடந்திராத அளவுக்கு மிகவும் அமைதியான பேரணியாக இருக்கும் என பக்காத்தான் ராக்யாட் வாக்குறுதி அளித்துள்ளது. "நாங்கள் அதனை மிகவும் அமைதியான பேரணியாக திகழச் செய்வோம். அது மிகவும் அமைதியாக நிகழும் போது கோலாலம்பூரில்…
பேரணிக்கு முன்னதாக மாபெரும் கூட்டம் நடத்த பக்காத்தான் திட்டம்
ஜனவரி 12-இல், வரலாற்றுச் சிறப்புவாய்ந்த மெர்டேகா அரங்கில் மக்கள் எழுச்சிப் பேரணி(Himpunan Kebangkitan Rakyat)யை நடத்துவதற்கு முதல்நாள் கோலாலம்பூரில் மாபெரும் கவுண்ட்டவுன் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்ய பக்காத்தான் திட்டமிடுகிறது. Rapat Kemuncak Mengira Detik (கவுண்ட் டவுன் நிகழ்வு) என்றழைக்கப்படும் அது கோலாலம்பூர், கம்போங் பாரு, சுல்தான் சுலைமான் கிளப்…
ஜனவரி 12 பேரணியை மெர்டேகா ஸ்டேடியத்தில் நடத்த பக்காத்தான் ஆலோசனை
Himpunan Kebangkitan Rakyat (மக்கள் எழுச்சி) என்ற பெயரில் நாடு முழுக்க பேரணிகள் நடத்திவரும் பக்காத்தான் ரக்யாட் அதன் இறுதிக்கட்ட பேரணியை ஜனவரி 12-இல் மெர்டேகா அரங்கில் நடத்த முடிவு செய்துள்ளது. பக்காத்தான் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் “ஆலோசனையின்படி” பேரணியை மெர்டேகா அரங்கில் நடத்தும் என பாஸ்…
‘அம்னோ மருட்டல்கள்’ காரணமாக பக்காத்தான் பேரணி வேறு இடத்துக்கு மாற்றம்
மலாக்காவில் வரும் சனிக்கிழமையன்று பக்காத்தான் ராக்யாட் ஏற்பாடு செய்திருந்த Himpunan Kebangkitan Rakyat (மக்கள் எழுச்சிப் பேரணி) கடைசி நேரத்தில் இடம் மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தின் உரிமையாளரை அம்னோ மருட்டியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. "அந்த இடத்தை வாடகைக்கு விடுவதற்கான எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை…
சிலாங்கூர் சாதனைகளை வெளியிடுமாறு பக்காத்தானுக்கு சாமிவேலு சவால்
சிலாங்கூரில் கடந்த கால பாரிசான் நேசனல் வெற்றிகளில் சவாரி செய்யாமல் கடந்த நான்கு ஆண்டுகளில் தான் ஏற்படுத்தியுள்ள சாதனைகளை வெளியிடுமாறு பக்காத்தான் ராக்யாட் வழி நடத்தும் மாநில அரசாங்கத்துக்கு முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு சவால் விடுத்துள்ளார். [காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்] "கடந்த நான்கு ஆண்டுகளாக…
முகைதின்: மே 13 மீண்டும் வராது, ஆனால் பக்காத்தான் ஆட்சிக்கு…
அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின், நேற்று அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில் மே 13 கலவரம் மீண்டும் நிகழலாம் என்று எச்சரித்ததை ஒதுக்கித்தள்ளினார். ஆனால், பக்காத்தான் ரக்யாட் ஆட்சியைக் கைப்பற்றினால் குழப்பம் மூள்வது உறுதி என்றார். “நான் அப்படி எதுவும் சொன்னதில்லை. மே 13…
அம்னோவின் கோட்டைக்குள் பக்காத்தான் ஊடுருவல்
ஜோகூர், பிஎன்னின் அசைக்கமுடியாத கோட்டையாகவும் அங்குள்ளவர்களின் வாக்குகள் அதன் ‘வைப்புத் தொகையாகவும்’ நெடுகிலும் கருதப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், பாஸ் ஆராய்ச்சி மையம் (பிபிபி) மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் அந்தத் தெற்கத்தி மாநில வாக்காளரிடையே மாற்றம் ஏற்பட்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அங்குள்ள இளம், நடுத்தர-வருமானம் பெறும் வாக்காளரிடையே குறிப்பிடத்தக்க…
ஜெலபாங் தொகுதி மீது பக்காத்தான்-பிஎஸ்எம் கருத்து வேறுபாடு
பேராக் ஜெலபாங் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது மீது பக்காத்தான் ராக்யாட்டுக்கும் அதன் தோழமைக் கட்சியான பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் பிஎன் -உடன் நேரடிப் போட்டியில் இறங்க பிஎஸ்எம் விரும்பும் வேளையில் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதில்…
பக்காத்தானுடன் இணைந்து மலேசியாவை ஆட்சி செய்ய பாஸ் தயார் என…
பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து கூட்டரசு அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதற்கு பாஸ் கட்சி தயாராக இருக்கிறது. இவ்வாறு அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பிரகடனம் செய்துள்ளார். அவர் இன்று அந்தக் கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் (முக்தாமார்) பேசினார். அடுத்த பொதுத் தேர்தலுக்கு முந்திய, கட்சியின்…
ஜைட்: “பெக்கானில் போட்டியிட நானே பொருத்தமான வேட்பாளன்”
கித்தா கட்சியின் முன்னாள் தலைவர் ஜைட் இப்ராகிம், பெக்கானில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எதிர்த்துப் போட்டியிட தாமே பொருத்தமான வேட்பாளர் என்று கூறிக்கொள்வது ஏன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதேவேளை, தம்மை அங்கு பக்காத்தான் ரக்யாட் வேட்பாளராக நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்போவதில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார். “சிலர் கூறுவதுபோல்…
பக்காத்தான் மழையில் விளக்கக் கூட்டங்களைத் தொடக்கியது
பிஎன் கோட்டை எனக் கருதப்படும் நெகிரி செம்பிலானில் நேற்றிரவு நடத்தப்பட்ட பக்காத்தான் ராக்யாட் பேரணியில் மழையையும் பொருட்படுத்தாமல் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். சிரம்பான் ஜெயாவில் காலி நிலம் ஒன்றில் நிகழ்ந்த மக்கள் எழுச்சிக் கூட்டம் என அழைக்கப்பட்ட அந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான குடைகள் காணப்பட்டன. அந்த…
பக்காத்தான் நெகிரி செம்பிலான் பேரணியை நடத்தும், இலக்கு 50,000 ஆதரவாளர்கள்
பக்காத்தான் ராக்யாட் உள்ளூர் போலீசார் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் வரும் சனிக்கிழமையன்று சிரம்பானில் மாபெரும் பேரணியை நடத்த உறுதி பூண்டுள்ளது. அதற்கு 50,000 ஆதரவாளர்களை ஒன்று திரட்டவும் அது எண்ணியுள்ளது. நாடு முழுமைக்குமான பக்காத்தான் விளக்கக் கூட்டங்களின் முதல் கட்டமாக சிரம்பான் பேரணி அமைகின்றது. அந்தப் பேரணிக்கு அனுமதி…
கையிருப்பில் உள்ள ரிம2.2 பில்லியனை சிலாங்கூர் அரசு செலவிட வேண்டும்:…
இன்று மக்களவையில் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிலாங்கூர் அரசு கடந்த நான்காண்டுகளில் சேர்த்து வைத்துள்ள ரிம2.2பில்லியனைச் செலவிட வேண்டும் என்று மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமைக் கேட்டுக்கொண்டனர். பக்காத்தான் ஆட்சியில் சிலாங்கூர் அரசாங்கம் சிறப்பாகச் செயல்படுவதாக பாராட்டிய அம்பாங் எம்பி சுரைடா கமருடின், கையிருப்பில் உள்ள பணத்தைச்…
‘கணக்காய்வில் நல்ல தோற்றத்தைப் பெற பக்காத்தான் creative கணக்கியல் முறையைப்…
தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் நல்ல தோற்றத்தைப் பெறுவதற்காக பக்காத்தான் ராக்யாட் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்கள் creative கணக்கியல் முறையைப் பயன்படுத்தியுள்ளதாக பிஎன் பின்னிருக்கை உறுப்பினர்கள் மன்றம் இன்று குற்றம் சாட்டியுள்ளது. அவ்வாறு குற்றம் சாட்டிய பிஎன் பின்னிருக்கை உறுப்பினர்கள் மன்றத் துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான், மாநிலங்களின்…
மலாய் பக்காத்தான் எம்பிகள் சொத்தைகள் என்கிறார் அமைச்சர்
பக்காத்தான் ரக்யாட் நாடாளுமன்றத்தில் மலாய்க்கார எம்பிகளைக் கூடுதலாக பெற்றிருக்கலாம் ஆனால், அவர்கள் Read More
தீய பிஎன் தந்திரங்களுக்கு தயாராக இருங்கள் என பக்காத்தான் பேராளர்களுக்கு…
வரும் பொதுத் தேர்தலுக்கான பிஎன் ஆயத்தங்களில் பினாங்கு மாநில அரசாங்கத்தை கீழறுப்புச் செய்வதற்கான "தீய தந்திரங்களும்' அடங்கும் என அதன் முதலமைச்சர் லிம் குவான் எங் எச்சரித்துள்ளார். அந்த தந்திரங்கள் என்ன என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றாலும் பிஎன் அவற்றை பயன்படுத்தும் போது அவற்றை எதிர்கொள்ள பக்காத்தான் தயாராக…
மாநில அரசுக்கு எதிராக சிலாங்கூர் பிஎன் புதிய போர் முனையை…
சிலாங்கூர் பிஎன் தலாம் கார்ப்பரேஷன் பெர்ஹாட் மறு சீரமைப்பு நடவடிக்கை, கணக்காய்வு நிறுவனமான KPMG முடிவுகள் ஆகியவை மீது முழுப் பக்க முழு வண்ண விளம்பரத்தை நேற்று வெளியிட்டு மாநில பக்கத்தான் ராக்யாட் அரசாங்கத்துக்கு எதிராக புதிய போர் முனையைத் தொடக்கியுள்ளது. "சிலாங்கூர் மக்களுக்கு முரண்பாடான பதில்கள் தேவை…