பாக்கத்தான் வெற்றி பெற்றால், துங்கு ரசாலி பிரதமரா?

Anwar-Kuliஅடுத்த பொதுத் தேர்தலில் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றினால், குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினரான துங்கு ரசாலி பிரதமர் பதவிக்கு பாக்கத்தானின் வேட்பாளராக இருப்பார் என்ற வதந்தியை அக்கட்சி இன்று மறுத்தது.

எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அந்த வதந்திகளை அம்னோவுக்கு சொந்தமான ஊடகங்களின் வேலை என்று வர்ணித்தார்.

“இது குறித்து எதனையும் நான் கேள்விப்படவில்லை. இது குறித்து கிட் சியாங் எதுவும் கேள்விப்பட்டாரா என்பது தெரியாது.

“இது அம்னோ நாளிதழ்களின் வேலை என்று நான் நினைக்கிறேன்”, என்று காஜாங்கில் இன்று நடைபெற்ற டோங் ஜோங் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பின் போது அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அவருடன் இருந்த லிம் கிட் சியாங் “இவை அனைத்தும் வதந்திகள் என்று நான் கருதுகிறேன்”, என்றார்.

 

 

TAGS: