ஜனவரி 12 பேரணியை மெர்டேகா ஸ்டேடியத்தில் நடத்த பக்காத்தான் ஆலோசனை

1pakatanHimpunan Kebangkitan Rakyat (மக்கள் எழுச்சி) என்ற பெயரில் நாடு முழுக்க பேரணிகள் நடத்திவரும் பக்காத்தான் ரக்யாட் அதன் இறுதிக்கட்ட பேரணியை ஜனவரி 12-இல் மெர்டேகா அரங்கில் நடத்த முடிவு செய்துள்ளது.

பக்காத்தான் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் “ஆலோசனையின்படி” பேரணியை மெர்டேகா அரங்கில் நடத்தும் என பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு  திங்கள்கிழமை  இரவு தெரிவித்தார்.

அதற்கு அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக மாட்  சாபு என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் முகம்மட் சாபு கூறினார் என்று இன்றைய சின் சியு ஜிட் பாவ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதுவே  கடந்த மாதம் நெகிரி செம்பிலான் சிரம்பானில் தொடங்கிய பக்காத்தான் பேரணிகளின் வரிசையில் இறுதிப் பேரணியாக அமையும்.ஒரு மில்லியன் பேரைக் கலந்துகொள்ள வைத்து அதை மாபெரும் பேரணியாக்க பக்காத்தான் நோக்கம் கொண்டிருக்கிறது.

TAGS: