பேரணிக்கு முன்னதாக மாபெரும் கூட்டம் நடத்த பக்காத்தான் திட்டம்

1preஜனவரி 12-இல், வரலாற்றுச் சிறப்புவாய்ந்த மெர்டேகா அரங்கில் மக்கள் எழுச்சிப் பேரணி(Himpunan Kebangkitan Rakyat)யை நடத்துவதற்கு முதல்நாள் கோலாலம்பூரில் மாபெரும் கவுண்ட்டவுன் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்ய பக்காத்தான் திட்டமிடுகிறது.

Rapat Kemuncak Mengira Detik (கவுண்ட் டவுன் நிகழ்வு) என்றழைக்கப்படும் அது கோலாலம்பூர், கம்போங் பாரு, சுல்தான் சுலைமான் கிளப் திடலில் மாலை மணி 5-க்கு நடைபெறும்.

பக்காத்தான் தலைவர்கள் அன்வார் இப்ராகிம், முகம்மட் சாபு, அப்துல் ஹாடி ஆவாங், நிக் அப்துல் அசீஸ் நிக் மாட், லிம் குவான் எங் போன்றோரும் மற்றவர்களும் அதில் உரையாற்றுவார்கள். ரோக் இசைக் கலைஞராக இருந்து சமய தன்முனைப்பாளராக மாறியுள்ள உஸ்டாஸ் அஸ்ஹார் முகம்மட் இட்ருஸும் மற்ற கலைஞர்களும்  கூட்டத்துக்கு வருவோரை மகிழ்விப்பர்

“இசைக்கலைஞர்களுடன் மற்ற கலைஞர்களும் அதில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளைக் காட்டுவார்கள்”, எனக் கூட்டத்தின் ஏற்பாட்டாளர் ஆடம் அலி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான பக்காத்தான் ஆதாரவாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் அந்நிகழ்வில் “ஒடுக்கப்பட்ட மக்களும்” தங்கள் குறைகளை எடுத்துச் சொல்வார்கள் என்றாரவர்..

 

TAGS: