பக்கத்தானில் இணைவதற்கான பிஎஸ்எம் மனு மீது விரைவில் முடிவு எடுக்கப்படும்

PSM-Anwarபக்கத்தான் கூட்டணியில் இணைவதற்கு மலேசிய சோசலிசக் கட்சி செய்திருந்த மனு மீது பக்கத்தான் ரக்யாட் தலைமைத்துவ மன்றம் விரைவில் முடிவு எடுக்கும் என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கூறினார்.

பக்கத்தான் கூட்டணியின் மூன்று பங்காளிக் கட்சிகளின் தலைமைச் செயலாளர்கள் அடங்கிய பக்கத்தான் ரக்யாட் செயலகத்தின் கவனத்திற்கு பிஎஸ்எம்மின் மனு கொண்டு வரப்பட்டுள்ளது.

“அச்செயலகம் பக்கத்தான் கொள்கை, அவர்களின் சின்னம் மற்றும் இதர விவகாரங்கள் குறித்து பிஎஸ்எம்முடன் விவாதித்துள்ளது.

“இந்த விவகாரம் பக்கத்தான் தலைமைத்துவ மன்றத்திற்கு விரைவில் கொண்டு வர விருப்பதால் (பிஎஸ்எம் சேர்த்துக்கொள்வது பற்றி) இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனை நாங்கள் மூன்று கட்சிகளின் உறுப்பினர்களுடன் விவாதிப்போம்”, என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.