பக்காத்தான், கூட்டுக் கொள்கை விளக்க அறிக்கையை அடுத்த வாரம் வெளியிடும்

11pkrஎந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் மாற்றரசுக்கட்சியான பக்காத்தான் ரக்யாட் அடுத்த வாரம் அதன் கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டு தேர்தல் பரப்புரையைத் தொடங்க ஆயத்தமாகிறது.

1pkr 1“கொள்கை விளக்க அறிக்கை வெளியிடப்படுவது 13வது பொதுத் தேர்தல் பரப்புரையின் தொடக்கமாகவும் அமையும்.”, என்று கூறிய பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி(இடம்). மாற்றரசுக் கட்சி  கொள்கை விளக்க அறிக்கையை முதலில் வெளியிடுவது இதுவரை வரலாற்றில் நிகழ்ந்திராத ஒன்று என்றார்.

இன்று பெட்டாலிங் ஜெயாவில் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பக்காத்தானின் பரப்புரை கொள்கை விளக்கங்களாகவும் முதிர்ச்சியான கலந்துரையாடல்களாகவும்  இருக்கும் என்றார்.

“இம்முறை பொதுத் தேர்தல் பரப்புரை, பிஎன் வழக்கமாக செய்யும் இனப் பழிப்புரைபோல் அல்லாமல்  மக்களின் பிரச்னைகளில், கொள்கை விளக்கத்தில் கவனம் செலுத்துவதை உறுதிப்படுத்துவோம்”, என்று ரபிஸி கூறினார்.

TAGS: