எதிர்க்கட்சிகளின் ‘Ubah’ சுலோகத்தை மாயாஜாலம் என நஜிப் நிராகரிக்கிறார்

najibஎதிர்க்கட்சிகளின் ‘Ubah’ சுலோகம் மக்கள் கவனத்தை பெறுவதற்கான எதிர்க்கட்சிகளுடைய மாயாஜாலம் என்று  நஜிப் அப்துல் ரசாக் நிராகரித்துள்ளார். அதற்கு பலியாகி விட வேண்டாம் என அவர் மக்களுக்கு அறிவுரை கூறினார்.

உண்மையில் அந்த சுலோகத்திற்கு பின்னணியில் உள்ள அமிழ்தம் எனக் கூறப்படுவது உண்மையில் விஷம்  என பராமரிப்பு அரசாங்கப் பிரதமருமான நஜிப் சொன்னார்.

najib1கிளந்தான், கெடா, பினாங்கு, சிலாங்கூர் ஆகியவற்றை எதிர்த்தரப்புக் கூட்டணி நிர்வாகம் செய்து வருகின்றன.

“எதிர்க்கட்சிகள் நிர்வாகம் செய்யும் நான்கு மாநிலங்களில் உள்ள நம்மில் சிலர் அந்த ‘Ubah’ சுலோகத்தினால் கவரப்பட்டோம். ஆனால் இன்று மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏனெனில் அவர்கள் தேர்வு செய்த அரசாங்கங்கள் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.”

ஆகவே அந்த மாநில அரசாங்கங்களை நிர்வகிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்ட பின்னரும் அவை ஒன்றும்  செய்யவில்லை என்பதால் மக்கள் அந்த சுலோகத்திற்கு மயங்கி விடக் கூடாது என நான் மக்களுக்கு  நினைவுபடுத்த விரும்புகிறேன்.”

அவர் இன்று சரவாக் சாரத்தோகில் உள்ள டாத்தாரான் கிரியானில் மக்களிடையே உரையாற்றினார்.