பக்காத்தான் பேரணி பேச்சாளர்கள் 28பேர்மீது போலீஸ் விசாரணை

rallyநேற்றிரவு பக்காத்தான் ரக்யாட்டின் மாபெரும் பேரணியில் பேசிய 32 பேச்சாளர்களில் 28 பேர் தேசநிந்தனைச் சட்டத்துக்கு முரணாக பேசினார்களா என்று போலீஸ் விசாரணை மேற்கொள்ளும்.

சம்பந்தப்பட்ட பேச்சாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் (சிபிஓ) இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்ததாக சீன நாளேடுகள் அறிவித்துள்ளன.

rally2பேரணியை ஒத்திவைக்குமாறு பக்காதானுக்கு ஆலோசனை கூறியதாகவும் ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். அதன் விளைவாக மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2012, அமைதிப்பேரணி சட்டப்படி பேரணி குறித்து 10 நாள்களுக்கு முன்னதாக போலீசுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுத் தேர்தலுக்குப் பின் தேர்தல் மோசடிக்குக் கண்டனம் தெரிவிப்பதற்காக பக்காத்தான் ஏற்பாடு செய்த அப்பேரணியில், சுமார் 120,000 பேர் கலந்துகொண்டனர். தேர்தல் மோசடிதான் பக்காத்தானின் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

TAGS: