பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் அரசு நடவடிக்கைகளில் ஏமாற்று வேலை நடந்துள்ளதா என்று ஆராயும்

pakatanபக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், நடப்பு  அரசாங்கம் தனியார் நிறுவனங்களுடன் செய்துகொaண்ட ஒப்பந்தங்களில் குறுக்கிடாது என்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

ஆனால், அங்கீகாரம் கொடுக்கப்பட்டதில் ஏமாற்று வேலை நடந்துள்ளதா என்பதை ஆராயும்.

அந்த விசயத்தில் விட்டுக்கொடுக்க முடியாது, ஏனென்றால் அப்படி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் நியாயமானவை அல்ல, அவற்றால் மக்கள்தான் துன்புறுவர் என அன்வார் குறிப்பிட்டார்.

“எடுத்துக்காட்டுக்கு, தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு மக்கள் நிறைய பணம் கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட வணிக ஏற்பாடுகள் திருத்தி அமைக்கப்படலாம்.

“அதேபோன்றதுதான் பெர்னாஸ். அது தனியார்மயப்படுத்தப்பட்டால் ஒரு சிலருக்குத்தான் நன்மை. ஆனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுவும் மறுபரிசீலனை செய்யப்படலாம்”, என அன்வார் ஷா ஆலமில் நடைபெறும் பக்காத்தான் ரக்யாட் மாநாட்டில் கூறினார்.

தேசிய ஃபீட்லோட் கார்ப்பரேசன் விவகாரத்தில் ரிம250 மில்லியன் கொடுக்கப்பட்டது.அதனால் ஒரு சிலர் ஆதாயம் அடைந்தனர். ஆனால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பலர் நட்டமடைந்தனர்.

பக்காத்தான் ஆட்சியில் இருந்தால் நிதிகள் முறையாக பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் என்றாரவர்.

 

TAGS: