இட ஒதுக்கீடுகள் மீதான பேச்சுக்களை இந்த வாரம் பக்காத்தான் நிறைவு செய்யும்

pakatanபக்காத்தான் ராக்யாட் தேர்தல் கொள்கை அறிக்கை இன்று வெளியிடப்படவிருக்கும் வேளையில் இட ஒதுக்கீடுகள் மீதான பேச்சுக்களை இந்த வாரம் நிறைவு செய்ய முடியும் என அது எதிர்பார்க்கிறது.

“எங்கள் அடுத்த கூட்டம் புதன் கிழமை நடைபெறும். எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைப் பிரதமர் கலைக்கக் கூடும் என நாங்கள் எதிர்பார்ப்பதால் இட ஒதுக்கீடுகள் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் இந்த வாரத்தில் முடித்துக் கொள்ள நாங்கள் முயற்சி செய்வோம்,” என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்தார்.

அவர் பக்காத்தான் மாநாடு நிகழும் வேளையில் நிருபர்களிடம் பேசினார். ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புக் கட்சிகள் போட்டியிட விரும்பும் ஒரே நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை (overlap)இரண்டு விழுக்காடாக மட்டுமே இருப்பதாக அஸ்மின் கூறினார்.

அந்தத் தொகுதிகளில் சபா, சரவாக்கில் உள்ள இடங்களும் அடங்கும் என்றார் அவர்.

அதனை உறுதி செய்த டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக், தமது கட்சி ஆர்வம் காட்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புக் கட்சிகள் போட்டியிட விரும்பும் ஒரே நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை மூன்று மட்டுமே எனத் தெரிவித்தார்.

 

TAGS: