தியான் சுவா, தாம்ரின், ஹேரிஸ் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்

Pakatan leders releasedபத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, எபியு தலைவர் ஹேரிஸ் இப்ராகிம் மற்றும் பாஸ் உறுப்பினர் தாம்ரின் காஃபார் ஆகியோரை போலீஸ் ரிமாண்டில் வைப்பதற்கு இன்று போலீஸ் செய்து கொண்ட மனுவை மஜிஸ்திரேட் நிராகரித்ததைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்படவிருக்கின்றனர்.

அந்த மூவரும் ஜிஞ்ஜாங் போலீஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக வழக்குரைஞர் அசோக் கந்தையா கூறினார். அம்மூவரும் நேற்றிலிருந்து அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் மே 13 இல் நடைபெற்ற ஒரு கருத்தரங்களில் பங்கேற்றதற்காக அம்மூவர் மீதும் போலீஸ் தேசநிந்தனைச் சட்டம் 1948 செக்சன் 4 இன் கீழ் விசாரணை செய்து வருகிறது.

போலீஸ் அவர்களை நேற்று நாட்டின் பல்வேறு இடங்களில் கைது செய்தது.