பிஎன் பத்து நடவடிக்கை மையத் திறப்பு விழாவில் தகவல் துறை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன

infoநேற்று நடைபெற்ற கோலாலம்பூர் பத்து நாடாளுமன்றத் தொகுதி பிஎன் தேர்தல் தளபத்திய மையத்தின் திறப்பு விழாவுக்கு  உதவியாக தகவல் துறைக்குச் சொந்தமான மூன்று வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் அரசாங்க எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடிய சாத்தியம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அந்த நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் நிராகரித்து விட்டனர்.

நிகழ்வின் போது நிகழ்த்தப்படும் உரைகளை ஒலிபரப்புவதற்காக அந்த மூன்று வாகனங்களில் ஒன்றின் கூரையில் ஒலிபெருக்கி சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன. மற்ற இரண்டு வாகனங்களும் ஒரு வேனும் அருகில் நிறுத்தப்பட்டிருந்தன.

அந்த வாகனங்கள் குறித்து கருத்துக்களைப் பெறுவதற்கு பிஎன் பத்து தகவல் செயலாளர் ரோட்ஸி தாஜுடின் மலேசியாகினியை சுஹாய்மி யாஹ்யா என்பவரிடம் அனுப்பி வைத்தார்.info1

தகவல் துறை சின்னம் பொறிக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி (மைக்ரோபோன்) வழியாக சுஹாய்மி அப்போது பேசிக் கொண்டிருந்தார்.

மலேசியாகினி: நான் அந்த வேனைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன்.

சுஹாய்மி: அது குறித்து என்ன ?

மலேசியாகினி: அது அத்துமீறல் அல்லவா ?

சுஹாய்மி: இன்னொரு நேரத்தில்,

மலேசியாகினி: அடுத்த முறை ? நான் இது பற்றி எழுதப் போகிறேன்.

சுஹாய்மி: அது எனக்கு எப்படித் தெரியும் ? உங்களுக்கு கண்கள் உள்ளன. நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

மலேசியாகினி: ஏன் இந்த வேன் ?

சுஹாய்மி நடப்பதை நிறுத்திக் கொண்டு திரும்பி, ” ஹேய் நான் உங்களை இன்னும் அடிக்காதது (smacked)
உங்கள் அதிர்ஷ்டமாகும்,” என்றார்.

அந்த நேரத்தில் பிஎன் சட்டையை அணிந்திருந்த ஒருவர் தலையிட்டு அந்த இடத்திலிருந்து மலேசியாகினியைப்  போகுமாறு செய்தார். “திரும்பிப் போங்கள்”, “இடையூறு செய்ய வேண்டாம்”, “திரும்பிப் பார்க்க வேண்டாம்,”  என அவர் உரத்த குரலில் தெரிவித்தார்.

நிருபர்கள் தங்கள் கடைமையைச் செய்வதற்கு தடை ஏதும் இருக்கக் கூடாது என பெர்சே தேர்தல் பரிந்துரைகளிலும் பராமரிப்பு அரசாங்க வழிகாட்டிகளிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் அரசாங்க வளங்கள் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவை அறிவுறுத்துகின்றன.

” சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்”

அந்தச் சம்பவம் நிகழ்ந்த போது பிஎன் பத்து நடவடிக்கை மையத் திறப்பு விழாவில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட பிஎன் துணைத் தலைவர் முஹைடின் யாசின் அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

info2அந்தத் தொகுதியை மீட்குமாறு அங்கு கூடியிருந்த 330 ஆதரவாளர்களிடம் உரையாற்றிய முஹைடின் கேட்டுக்  கொண்டார்.

“தியான் சுவா (நடப்பு பத்து எம்பி) மிகவும் பொறுப்பற்றவர் ( லஹாட் டத்து சம்பவம் தொடர்பில்). பத்து மக்கள் அந்த நாடாளுமன்ற உறுப்பினருடைய நடத்தை குறித்து வெட்கப்பட வேண்டும்,” என அவர்  சொன்னார்.

“பல உதவித் திட்டங்களை அறிமுகம் செய்துள்ள பிஎன் -னை மக்கள் இப்போது ஆதரிக்கத் தொடங்கியுள்ள போதிலும் அவர்கள் ஆதரவைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது,” என்றார் அவர்.

“வாக்களிக்குமாறு யாரும் அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது, அவர்கள் எல்லாவற்றையும் முடிவு செய்கின்றனர்.”

லஹாட் டத்து ஊடுருவல் ‘ஒர் அம்னோ சதி’ என தியான் சுவா சொன்னதாக மார்ச் முதல் தேதி வெளியான பிகேஆர் கட்சி ஏடான Keadilan Daily -யிடம் சொன்னதாக கூறப்படுகின்றது.

ஊடுருவல் பற்றி தொடக்கத்தில் எந்தத் தகவலும் வெளியிடப்படாதது குறித்தே தாம் அவ்வாறு சொன்னதாக அவர் பின்னர் விளக்கினார்.

TAGS: