லெம்பா பந்தாயில் பிஎன்-னுக்கு எதிர்நீச்சல்

pantaiஅடுத்த பொதுத் தேர்தலில் லெம்பா பந்தாய் தொகுதியில் பிஎன் வேட்பாளராக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் நிறுத்தப்படலாம் என்பது ஊரறிந்த ரகசியமாகும்.

ஆனால் பிஎன்/அம்னோ லெம்பா பந்தாயில் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் – யுபிஎஸ்ஆர், பிஎம்ஆர் தேர்வுகளில் நன்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் ரொக்கமும் பள்ளிக்கூட பைகளும் வழங்கப்பட்டன- அதற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்க்கும் போது நடப்பு எம்பி நுருல் இஸ்ஸா அன்வாரிடமிருந்து அந்தத் தொகுதியை கைப்பற்றுவதற்கு அவர் கடுமையாக போராட வேண்டியிருக்கும் எனத் தெரிகிறது.

மலாயாப் பல்கலைக்கழக மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வில் பேசிய ராஜா நோங் சிக், பிஎன் -னுக்கு வாக்களிக்குமாறு அங்கிருந்த 300 பெற்றோர்களைக் கேட்டுக் கொண்டார்.

அப்போது மாணவர்கள் மட்டுமே கைதட்டினர். பெற்றோர்கள் உற்சாகமாக இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.pantai1

“நாம் விழாக் காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை நினைவில் கொள்ளுங்கள். கடந்த ஞாயிற்றுக் கிழமை நாம் கூட்டரசுப் பிரதேச நாளை கொண்டாடினோம். அடுத்த வாரம் சீனப் புத்தாண்டு வருகிறது.”

“அடுத்து நாம் நோன்புப் பெருநாளை நாம் கொண்டாடுவோம். நேரம் வரும் போது பிஎன் -னுக்கு வாக்களிப்பதின் மூலம் நீங்கள் (பெற்றோர்கள்) சரியானதைச் செய்வீர்கள் என நான் நம்புகிறேன்.”

அதற்கு பிள்ளைகள் மட்டுமே கை தட்டினார்கள். அவர் சொன்னார்: பிள்ளைகளுடைய உற்சாகத்தைப் பார்க்கும் போது பிஎன் வெற்றி பெறும்.”

மாணவர்களுக்கு ரொக்க வெகுமதிகளை வழங்குவதற்காக ராஜா நோங் சிக் 40 ஆயிரம் ரிங்கிட் தமது சொந்தப் பணத்தைக் கொடுத்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெற்றோர்களிடம் கூறினர்.

பிஎன்/அம்னோ லெம்பா பந்தாய் அத்தகைய நிகழ்வை கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகின்றது.

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அந்தத் தொகுதியில் பிஎன் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.

ராஜா நோங் சிக் அதிகாரத்துக்கு உட்பட்டுள்ள கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் அந்தக் கொடிகளை அகற்றவில்லை.

2008 தேர்தலில் பிகேஆர் கட்சியின் நுருல் இஸ்ஸா அந்தத் தொகுதியில் பிஎன் வேட்பாளர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலை 2,895 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

 

TAGS: