நுருல் இஸ்ஸா நாடாளுமன்றத்தில் சீர்திருத்தங்களை முன்மொழிவார்

அண்மைய பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது 'அரசியல். தேர்தல்,  நாடாளுமன்ற சீர்திருத்தங்களுக்கான' யோசனைகளை லெம்பா பந்தாய் எம்பி-யாக மீண்டும் தேர்வு  செய்யப்பட்டுள்ள நுருல் இஸ்ஸா அன்வார் முன்மொழிவார். "தேர்தலுக்கு முன்னதாக 'இன அரசியல் பயன்படுத்தப்பட்டதாலும்' தேர்தலில் மோசடிகள்  நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவதாலும் அவை தேர்தல் முடிவுகள்…

“டாக்டர் மகாதீர் இப்ராஹிம் அலிக்கு அளிக்கும் ஆதரவு அவருக்கு ‘பாதகமானது’

பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலியை பகிரங்கமாக அங்கீகரித்ததின் மூலம் முன்னாள் பிரதமர் டாக்டர்  மகாதீர் முகமட் 'தமக்கும் தமது கடந்த காலத்திற்கும் பாதகத்தை' ஏற்படுத்தியுள்ளதாக பிகேஆர் உதவித்  தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கூறியிருக்கிறார். தமது மலாய் மேலாண்மை எண்ணங்கள் மூலம் இந்த நாட்டில் இனப் பதற்றத்தைத் தூண்டுவதாக…

நுருல் இஸ்ஸாவின் வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

லெம்பா பந்தாய் தொகுதியில் சந்தேகமான வாக்காளர்களுடைய பெயர்களை நீக்குமாறு தேர்தல் ஆணையத்தை  கட்டாயப்படுத்துவதற்கு உயர் நீதிமன்ற ஆணையை பெறுவதற்கான முயற்சியில் அதன் எம்பி-யான நுருல்  இஸ்ஸா தோல்வி கண்டார். 2011ம் ஆண்டுக்கான லெம்பா பந்தாய் வாக்காளர் பட்டியலிலும் தமது தொகுதிக்கு 2012 பிற்பகுதியில்  வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியலிலும்…

மலாயாப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் நுருல் இஸ்ஸாவுக்கு ஹீரோ வரவேற்பு

லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் மலாயாப் பல்கலைக்கழகக் கருத்தரங்கு ஒன்றில் நேற்று பேசவிருந்தது அரசாங்க நெருக்குதலைத் தொடர்ந்து ரத்துச் செய்யப்பட்ட பின்னர் அந்த நிகழ்வுக்குச் சென்ற அவருக்கு ஹீரோ வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒருவராக அதில் கலந்து கொள்ளும் பொருட்டு நேற்று பிற்பகல் விரிவுரை மண்டபத்துக்குள்…

நொங் சிக் பொது விவாதம் செய்ய வர வேண்டும்: நுருல்…

பிகேஆர் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார், தம்மைப் பற்றி ராஜா நொங் சிக் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துரைக்க அவரைத் தம்முடன் விவாதமிட அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார். கடிதம் இன்று காலை புத்ரா ஜெயாவில் உள்ள கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சுக்கு அனுப்பப்பட்டு அமைச்சின்…

நுருலுடன் விவாதம் நடத்துவதை நோங் சிக் நிராகரித்தார்

லெம்பா பந்தாய் தொகுதி மக்கள், தங்களுக்கு யார் அதிக உதவி செய்துள்ளார்கள் என்பதை முடிவு செய்வதற்கு தம்முடன் விவாதம் நடத்த வருமாறு அந்தத் தொகுதியின் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்த அறைகூவலை அந்தத் தொகுதின் அம்னோ தலைவர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் நிராகரித்துள்ளார்.…

விவாதத்திற்கு வாருங்கள் என நுருல் இஸ்ஸா, ராஜா நோங் சிக்-கிற்குச்…

லெம்பா பந்தாய் தொகுதியில் நிலவுகின்ற வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் தாம் தவறி விட்டதாக கூறப்படுவது மீது தம்முடன் விவாதம் நடத்த வருமாறு கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நோங் சிக் ஜைனல் அபிடினுக்கு பிகேஆர் லெம்பா பந்தாய் எம்பி  நுருல் இஸ்ஸா அன்வார் சவால் விடுத்துள்ளார்.…

லெம்பா பந்தாயில் பிஎன்-னுக்கு எதிர்நீச்சல்

அடுத்த பொதுத் தேர்தலில் லெம்பா பந்தாய் தொகுதியில் பிஎன் வேட்பாளராக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் நிறுத்தப்படலாம் என்பது ஊரறிந்த ரகசியமாகும். ஆனால் பிஎன்/அம்னோ லெம்பா பந்தாயில் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் - யுபிஎஸ்ஆர், பிஎம்ஆர் தேர்வுகளில் நன்கு தேர்ச்சி…

உத்துசானுக்கு எதிராக நுருல் இஸ்ஸா அவதூறு வழக்கு தொடுக்கிறார்

பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார்,  இம்மாதத் தொடக்கத்தில் சுபாங் ஜெயா  Full Gospel Tabernacle தேவாலயத்தில் தாம் பேசியதைத் திரித்துக் கூறியதாகக் குற்றம்சாட்டி அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவுக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். வழக்குப் பதிவு செய்ய தம் வழக்குரைஞரும் பாஸ்…

நுருலை பொது மக்கள் மதிப்பீடு செய்யட்டும் என்கிறார் பாஸ் உலாமா…

'சமயத்தில் கட்டாயம் இல்லை' என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கூறியுள்ள கருத்துக்கள் மீது அவரைப் பொது மக்கள் மதிப்பீடு செய்ய விட்டு விடுவதாக பாஸ் கட்சியின் உலாமாப் பிரிவுத் தலைவர் ஹருண் தாயிப் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய அந்தக் கருத்துக்காக நுருலை ஏற்கனவே கண்டித்துள்ள அவர்,…

போலீஸ் நுருல் மீதான விசாரணையில் ‘உதவி மட்டுமே’ செய்கின்றது

பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்துள்ள 'சமயத்தில் கட்டாயம் இல்லை' என்னும் கருத்து குறித்து ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை நடத்தும் விசாரணையில் போலீசார் 'உதவி மட்டுமே' செய்து வருகின்றனர். "அது எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல. ஏனெனில் அது சமயம் சம்பந்தப்பட்ட விஷயமாகும்,"…

நோங் சிக்: வாக்குகளை கவருவதே நுருல் அறிக்கையின் நோக்கம்

"சுபாங் ஜெயாவில் நிகழ்ந்த கருத்தரங்கு ஒன்றில் சமயச் சுதந்திரத்தை ஆதரித்து நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்துள்ள அறிக்கை வாக்குகளைக் கவரும் நோக்கத்தைக் கொண்டது. மக்களுக்கு அவர் உண்மையாகச் சேவை செய்யவில்லை என்பதை அது காட்டுகின்றது." இவ்வாறு கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராஜா நோங் சிக்…

நசாருதின்: நுருல் சொல்வது தவறு, முஸ்லிம்களுக்குத் தேர்வு இல்லை

'சமயத்தில் கட்டாயம் இல்லை' என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்துள்ள அறிக்கை மலாய் முஸ்லிம்களுக்கு சமயச் சுதந்தரத்தை வழங்குவதற்கு ஒப்பாகும் என முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா கூறுகிறார். அந்த வாசகம் முஸ்லிம் அல்லாதவருக்கு மட்டுமே பொருந்தும் என அவர்…

நுருல் உரையில் எந்தத் தப்பையும் பாஸ் காணவில்லை

"சமயத்தில் கட்டாயம் இல்லை" என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்த அறிக்கையில் தப்பு ஏதனையும் பாஸ் கட்சி காணவில்லை. "இஸ்லாத்தின் காவலன்" என தன்னை அம்னோ கருதிக் கொள்வதாகவும் அது சாடியது. "அந்த விவகாரம் குறித்து சர்ச்சை எழுந்த பின்னர் ஒருவர் இஸ்லாத்தைத் தழுவியதும்…

நுருல் உத்துசானுக்கு எதிராக ஜயிஸில் புகார் செய்தார்

இஸ்லாம் குறித்த கருத்தரங்கு ஒன்றில் தாம் விடுத்த அறிக்கைகளை உத்துசான் மலேசியா திரித்து செய்தி வெளியிட்டுள்ளதாகக் கூறி பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறையிடம் புகார் செய்துள்ளார். அந்த நாளேட்டுக்கு எதிராக ஜயிஸ் இயக்குநர் மார்சுக்கி ஹுசினிடம் பந்தாய்…

நுருல் இஸ்ஸா நாளை ஜயிஸில் புகார் செய்வார்

சமய நம்பிக்கையற்ற நிலை என்னும் பிரச்னை மீது தாம் தவறாக குற்றம் சாட்டப்படுவதாக தாம் கூறிக் கொள்வதற்கு எதிராக பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில இஸ்லாமிய விவகாரத் துறையில் புகார் செய்யவிருக்கிறார். நாளை காலை 11.00 மணி வாக்கில் தாம்…

‘இஸ்லாத்தை களங்கப்படுத்தியதாக நுருல் மீது குற்றம் சாட்டப்படலாம்’

இஸ்லாத்தை விட்டு வெளியேறுமாறு முஸ்லிம்களை ஊக்குவிக்கும் அறிக்கையை பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் வெளியிட்டார் என்பது உண்மை என்றால் 'இஸ்லாத்தை'  களங்கப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்படலாம். இவ்வாறு பிரதமர் துறை துணை அமைச்சர் மாஷித்தா இப்ராஹிம் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது தெரிவித்துள்ளார்.…

ஜயிஸ் உத்துசானையும் விசாரிக்க வேண்டும் என நுருல் இஸ்ஸா விருப்பம்

ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை தம்மை விசாரிப்பதற்கு முடிவு செய்தால் மலாய் மொழி நாளேடான உத்துசான் மலேசியாவையும் விசாரிக்க வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கூறியிருக்கிறார். "ஆம் ஜயிஸ் உத்துசான் மலேசியாவையும் விசாரணைக்கு அழைக்கும் என நான் நம்புகிறேன். காரணம்…

நூருல்: சமயத்தைத் தேர்ந்தெடுப்பதில் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது

இன்ன சமயத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறார் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார். “என்னைக் கேட்டால்.... சமயம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை..... சமய சுதந்திரம் என்பது மலாய்க்காரர்-அல்லாதாருக்கு மட்டும்தான் என்பது சரியில்லை”, என்றாரவர். இன்று காலை சுபாங் ஜெயாவில் “இஸ்லாமிய அரசு” மீதான கருத்தரங்கம்…