நுருல் இஸ்ஸாவின் வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

nurulலெம்பா பந்தாய் தொகுதியில் சந்தேகமான வாக்காளர்களுடைய பெயர்களை நீக்குமாறு தேர்தல் ஆணையத்தை  கட்டாயப்படுத்துவதற்கு உயர் நீதிமன்ற ஆணையை பெறுவதற்கான முயற்சியில் அதன் எம்பி-யான நுருல்  இஸ்ஸா தோல்வி கண்டார்.

2011ம் ஆண்டுக்கான லெம்பா பந்தாய் வாக்காளர் பட்டியலிலும் தமது தொகுதிக்கு 2012 பிற்பகுதியில்  வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியலிலும் காணப்படும் சந்தேகமான பெயர்களை நீக்குவதற்கு தேர்தல் தலைமைப் பதிவாளர் மறுத்துள்ளது சட்ட விரோதமானது என அறிவிக்க நீதித் துறை மறு ஆய்வுக்கு விண்ணப்பிக்க நுருல் இஸ்ஸா அனுமதி கோரியிருந்தார்.

மார்ச் 22ம் தேதி பிகேஆர் உதவித் தலைவருமான அவர், காதிர் சுல்தான் அப்துல் மஜிட் என்ற பதிவு பெற்ற வாக்காளருடன் அந்த விண்ணப்பத்தை சமர்பித்தார்.

இரு தரப்பு வழக்குரைஞர்களுடைய வாதங்களையும் தமது அறையில் செவிமடுத்த பின்னர் நீதிபதி ஸாக்காரியா சாம் அந்த முடிவைச் செய்தார்.

1958ம் ஆண்டுகான தேர்தல் சட்டத்தின் 94வது பிரிவின் கீழ் வாக்காளர் பட்டியல் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்டதும் அதனை மறு ஆய்வு செய்யவோ ரத்துச் செய்யவோ அல்லது நிறுத்து வைக்கவோ நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என நீதிபதி தீர்ப்பில் கூறினார்.

-பெர்னாமா

TAGS: