பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார், இம்மாதத் தொடக்கத்தில் சுபாங் ஜெயா Full Gospel Tabernacle தேவாலயத்தில் தாம் பேசியதைத் திரித்துக் கூறியதாகக் குற்றம்சாட்டி அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவுக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
வழக்குப் பதிவு செய்ய தம் வழக்குரைஞரும் பாஸ் உச்சமன்ற உறுப்பினருமான முகம்மட் அனிபா மைடினுடன் நீதிமன்றம் வந்திருந்த நுருல் இஸ்ஸா, அச்செய்தித்தாளில் தொடர்ந்து வெளிவந்த செய்திகளும் தம்மை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறியுள்ளார்.
இதற்காக, அந்நாளேடு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தம்மை அவமதிக்கும் செய்திகளை வெளியிடக்கூடாது என எதிர்வாதிகளுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் செலவுத் தொகை கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.