நூருல்: சமயத்தைத் தேர்ந்தெடுப்பதில் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது

இன்ன சமயத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறார் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார்.

“என்னைக் கேட்டால்…. சமயம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை….. சமய சுதந்திரம் என்பது மலாய்க்காரர்-அல்லாதாருக்கு மட்டும்தான் என்பது சரியில்லை”, என்றாரவர்.

இன்று காலை சுபாங் ஜெயாவில் “இஸ்லாமிய அரசு” மீதான கருத்தரங்கம் ஒன்றில் நுருல் பேசினார்.

அப்போது கருத்தரங்கப் பார்வையாளர்களில் ஒருவர், மலாய்க்காரர்-அல்லாதாருக்கு உள்ளதுபோன்ற சமய சுதந்திரம் மலாய்க்காரர்களுக்கும் தேவையா என்று வினவியதற்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

முஸ்லிம்களிடம் சமய நம்பிக்கை “தரமாக” இருக்க வேண்டும். அதுதான் முக்கியம் என்றாரவர்.

“நான்கூட அசுந்தாவில் (இடைநிலைப்பள்ளி) படித்தவள்தான். அங்கு பெரிய சிலுவை இருக்கும். கத்தோலிக்க பாடகர் குழு ஒன்றும் இருந்தது. ஆனால், அவை என்னில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை”, என்றார்.

ஆனால், மலாய்க்காரர்களுக்குச் சட்டப்பூர்வமாகமாக சமய சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நுருல் குறிப்பிடவில்லை. “நடப்பில் உள்ள கருத்தையே நான் ஏற்கிறேன்”, என்றாரவர்.

TAGS: