அண்மைய பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது ‘அரசியல். தேர்தல், நாடாளுமன்ற சீர்திருத்தங்களுக்கான’ யோசனைகளை லெம்பா பந்தாய் எம்பி-யாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள நுருல் இஸ்ஸா அன்வார் முன்மொழிவார்.
“தேர்தலுக்கு முன்னதாக ‘இன அரசியல் பயன்படுத்தப்பட்டதாலும்’ தேர்தலில் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவதாலும் அவை தேர்தல் முடிவுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாலும் ‘சமரசத்திற்கு முன்னதாக ஜனநாயகம்’ நிலைநிறுத்தப்பட வேண்டும் என மலேசியர்கள் வேண்டுகோள் விடுப்பதாக நுருல் சொன்னார்.
“அரசாங்கம் சட்டப்பூர்வத் தன்மையைப் பெற்றிருக்காதது மலேசியப் பொது மக்கள் முன்பு உள்ள
பிரச்னையாகும். ஜோடிக்கப்பட்ட சமரசத்திற்கான தேவை அல்ல,” என அவர் இன்று விடுத்த அறிக்கை
தெரிவித்தது.
“எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மலேசியர்கள் குறிப்பாக இளம் மலேசியர்கள் ஊழல், இனவாதம் ஆகியவற்றுக்கு எதிராக குடிமக்கள் என்ற முறையில் தங்களுக்கு இடையில் ஒற்றுமையை உருவாக்கி வலுப்படுத்திக் கொண்டுள்ளனர்.”
“தங்களது ஜனநாயக உரிமைகள் திருடப்படுவதையும் தீவிரவாதத்தையும் அவர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.”
‘அதிகம் தேவைப்படும் ஊக்கம்’
மொத்தம் செலுத்தப்பட்ட வாக்குகளில் 51 விழுக்காட்டை பக்காத்தான் பெற்ற தேர்தல் முடிவுகளுக்குச் ‘சீனர் சுனாமி’ காரணம் எனக் கூறிய அதே வேளையில் ‘தேசிய சமரசத்திற்கான’ வேண்டுகோளை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விடுத்துள்ளது பற்றி நுருல் கருத்துரைத்தார்.
“சட்ட ஆலோசனைகளைப் பெற்ற பின்னர் நான் அரசியல், தேர்தல், நாடாளுமன்ற சீர்திருத்தங்களைக்
கோரும் பல தனி உறுப்பினர் மசோதாக்களையும் இதர யோசனைகளையும் முன்மொழியப் போகிறேன்.”
“நமது நாட்டின் மறு வாழ்வுக்குப் பெரிதும் தேவைப்படுகின்ற ஊக்கத்தை அவை வழங்கும்.”
13 வது பொதுத்தேர்தலில் தோல்வியுற்ற BN வேட்பாளர்களுக்கு பதவி கொடுக்கக்கூடாது,அதற்குப்பதிலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர் கட்சி வேட்ப்பாலர்களுக்குப் பதவிகள் கொடுத்தால் அவர்கள் BN அரசாங்கத்துடன் இணைந்து மலேசியா மேம்பாடடைய உதவுவார்கள்.