மலிவுவிலை நிலம்: டிஏபியால் திரிபுபடுத்தப்படுகிறது, சிலாங்கூர் பிஎன்

2008-க்குமுன் சிலாங்கூரில் பிஎன் ஆட்சி செய்த காலத்தில் அக்கூட்டணிக்கு நிலம் குறைந்த விலையில் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருப்பது பற்றி சிலாங்கூர் பிஎன் செயலாளர் முகம்மட் ஸின் முகம்மட்டிடம் வினவியதற்கு அவர் அக்கேள்விக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்தார். அவ்விவகாரத்தை டிஏபி அரசியல் நோக்கத்தில் திரிபுபடுத்துவதாக   வருணித்த அவர், 2008-க்குமுன் நடந்ததாகச் சொல்லப்படும் அதை இப்போது…

வாக்காளர்களின் தொகுதிகளை மாற்றும் சதிவேலையில் தேசிய முன்னணி!

அண்மையில் தங்களை வாக்காளர்களாக பதிவுசெய்துகொண்ட காராக்கில் உள்ள புதிய வாக்காளர்கள் பலர் வேறு தொகுதிகளில் வாக்களிக்கப் பதியப்பட்டுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இங்கு தாமான் முஹிபா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சோங் மற்றும் அவரது இரு மகன்கள் இவ்வாண்டு ஆரம்பத்தில் தங்களை வாக்காளர்களாக அஞ்சல் நிலையத்தில் பதிவு…

21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய காமெடி: ‘பாரிசான் அனைத்து இனத்தினரிடமும்…

நேற்று ஜனநாயக செயல் கட்சி (டிஎபி) பேராளர் மாநாட்டில் நடந்தது பாரிசான் நேசனலில் (பிஎன்) நடப்பதில்லை. ஏன்? பாரிசான் அனைத்து இனத்தினரிடமும் நியாயமாக நடந்துகொள்கிறது என்று இந்நாட்டு இந்தியர்களை வெற்றிகரகமாக ஓரங்கட்டிய அம்னோ/பாரிசான் அரசின் தலைவர் நஜிப் ரசாக் கூறுகிறார். டிஎபி சீனர் ஆதிக்கம் கொண்ட கட்சி. அது…

தங்க முதலீடு மோசடி தொடர்பில் பிஎன் எம்பிகள் பேங்க் நெகாராவைச்…

இரண்டு பாரிசான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலேசியர்கள் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து மோசம் போவதைத் தடுக்காததற்காக பேங்க் நெகாராவைக் கடுமையான சாடினர். “பேங்க் நெகாராவின் கவனக் குறைவே அதற்குக் காரணம்”, என்று மக்களவையில் நிதியியல் சேவைச் சட்டத் திருத்த முன்வரைவு மீதான விவாதத்தின்போது…

பேராசிரியர்: பிஎன் 120 இடங்களை வெல்லும், உறுதியில்லாத தொகுதிகள் 24

தேர்தல் இன்று நடைபெற்றால் பிஎன் 120 நாடாளுமன்ற இடங்களிலும் பக்காத்தான் ராக்யாட் 70 இடங்களிலும்  வெல்லும். 24 தொகுதிகள் உறுதியற்றவை என பேராசிரியர் சம்சுல் அம்ரி பஹாருதின் கூறினார். மலேசியாவின் மொத்த நாடாளுமன்றத் தொகுதிகள் 222. அவற்றுக்கு அடுத்த ஜுன் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். சாதாரண பெரும்பான்மையான…

லிம் குவான் எங்: மக்களவை பதில் ‘குளறுபடி’ உண்மையான பிஎன்…

சுயேச்சை சீனப் பள்ளிகள் விவகாரம் மீது வழங்கப்பட்ட நாடாளுமன்ற பதிலைத் திருத்துவதற்குக் கல்வி அமைச்சு எடுத்துள்ள அவமானத்தை தரும் நடவடிக்கை பிஎன் கூட்டரசு அரசாங்கத்தின் உண்மையான நிறத்தை அம்பலப்படுத்து விட்டது என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார். "நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் முஹைடின் யாசின்…

‘விளம்பர ஆசை’ பிடித்த டிஏபி என பிஎன் சாடல்

எதிர்வரும் தேர்தலில் மீண்டும் வேட்பாளராகும் வாய்பைப் பெருக்கிக்கொள்ள தனது சட்டமன்ற உறுப்பினர்களைத் தயார்படுத்தும் டிஏபி-இன் முயற்சிமீது வெறுப்பைக் கொட்டுகிறது பிஎன். “மக்கள் தங்கள் எதிர்காலத்தை எந்தக் கட்சியிடம் ஒப்படைப்பது என்பதில் விழிப்பாக இருக்க வேண்டும்”, என்று கொம்டார் பிஎன் ஒருக்கிணைப்பாளர் லோ சை தெக் கூறினார். டிஏபி-இன் “உண்மை…

‘சிலாங்கூரில் 20 மில்லியன் ரிங்கிட் பெறும் நிலங்களை பிஎன் அபகரித்துக்…

சிலாங்கூரில் பாரிசான் நேசனல் நிலங்களை அபகரித்துக் கொண்டது என செக்கிஞ்சாங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இங் ஸ்வீ லிம் குற்றம் சாட்டியுள்ளார். "அது 20 துண்டு நிலங்களை அதன் சந்தை மதிப்பு மொத்தம் 20 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த போதிலும் ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட் என்ற…

பிஎன் நிறைவேற்றாத வாக்குறுதியை பூர்த்தி செய்ய சிலாங்கூர் 300 மில்லியன்…

கிள்ளானில் மூன்றாவது பாலத்தைக் கட்டுவதற்கு தான் அளித்த வாக்குறுதியை பிஎன் நிறைவேற்றவில்லை. ஆனால் அதனை பூர்த்தி செய்வதற்கு 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பக்காத்தான் ராக்யாட் ஆட்சி செய்யும் சிலாங்கூர் அரசாங்கம் 300 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கும். இன்று காலை மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் வரவு செலவுத்…

பிஎன் உண்மையான அரசியல் மாற்றத்துக்கு தயாராக இல்லை என்கிறார் ஒர்…

2008 பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்ததற்கு அம்னோ வழி நடத்தும் பிஎன் உண்மையான அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரும் ஆற்றலைக் கொண்டிராததே காரணம் என புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. "மலேசியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை" என்னும் தலைப்பைக் கொண்ட அந்தப்…

பொதுச்சேவை ஊழியர் சம்பளத்தைத் திருத்தி அமைக்க அரசு ஆலோசனை

பொதுச்சேவை ஊழியர்களுக்கு ஐந்து விழுக்காடு ஊதிய உயர்வு கொடுப்பது உள்பட சம்பளத் திட்டத்தை மாற்றி அமைப்பது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தலைமைச் செயலாளர் அலி ஹம்சா கூறினார். வாழ்க்கைச் செலவு கூடி வருவதால் இந்த மாற்றம் அவசியமாகிறது என்றாரவர். “பிரிவுவாரியாக ஆராய்வோம். உயர்நிலையில் உள்ளவர்களுக்கு ஐந்து விழுக்காடு…

தேர்தல் கொள்கை விளக்க அறிக்கை பிரதமரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கிறது

பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல்(பிஎன்) பினாங்கில் வெற்றி பெற்றால் அம்மாநிலத்தை மேம்படுத்தும் திட்டங்கள் எல்லாம் தயார்நிலையில் இருப்பதாகவும் அவை இப்போது திருத்திச் சீர்மைப்படுத்தப்பட்டு வருவதாகவும் மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயோ கூறினார். இப்போதுள்ள நிலையில், சுற்றுலா, அடக்கவிலை வீடுகள், போக்குவரத்து என எட்டு முக்கிய பொருளாதார…

விளையாட்டுத்துறையில் வெற்றியை ஊக்குவிக்க மலேசியா பெரும்பணம் செலவிடுகிறது

இவ்வாண்டு முற்பகுதியில் லண்டனில் முதலாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெறுவது மீண்டும் மயிரிழையில் தப்பிப்போனதை அடுத்து மலேசியா விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க 2013-இல் ரிம 187.2 மில்லியன் செலவிடத் திட்டமிட்டுள்ளது. “அதிகம் செலவிடுவது பெரிதல்ல. ஆனால், செலவிடும் பணம் விளையாட்டுத் துறையில் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும்”, என்று இளைஞர் விளையாட்டு…

மலாய் பக்காத்தான் எம்பிகள் சொத்தைகள் என்கிறார் அமைச்சர்

பக்காத்தான் ரக்யாட் நாடாளுமன்றத்தில் மலாய்க்கார எம்பிகளைக் கூடுதலாக பெற்றிருக்கலாம் ஆனால், அவர்கள் Read More

பிஎன்: பக்காத்தான் ரகசிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளன

13வது பொதுத் தேர்தலுக்கான எதிரிகளுடைய ரகசிய வியூக ஆவணங்களை பெற்றுள்ளதாகக் கூறிக் கொள்ளும் ஒரே கூட்டணி பக்காத்தான் ராக்யாட் மட்டுமல்ல. பக்காத்தானுடைய ரகசிய ஆவணங்கள்- அதன் வேட்பாளர் பட்டியல் உட்பட ஆளும் கூட்டரசு கூட்டணியிடம் உள்ளதாக பிஎன் தலைமைச் செயலாளர் தெங்குன் அட்னான் தெங்கு மான்சோர் கூறினார். "ஆனால்…

தீய பிஎன் தந்திரங்களுக்கு தயாராக இருங்கள் என பக்காத்தான் பேராளர்களுக்கு…

வரும் பொதுத் தேர்தலுக்கான பிஎன் ஆயத்தங்களில் பினாங்கு மாநில அரசாங்கத்தை கீழறுப்புச் செய்வதற்கான "தீய தந்திரங்களும்' அடங்கும் என அதன் முதலமைச்சர் லிம் குவான் எங் எச்சரித்துள்ளார். அந்த தந்திரங்கள் என்ன என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றாலும் பிஎன் அவற்றை பயன்படுத்தும் போது அவற்றை எதிர்கொள்ள பக்காத்தான் தயாராக…

பினாங்கு பிஎன் : சீனப்பள்ளிக்கு ரிம3 மில்லியன், தேர்தல் வருவதால்…

புக்கிட் மெர்தாஜாமில் எஸ்எம்ஜெகே ஜிட் சின் II சீன இடைநிலைப் பள்ளியின் கட்டிட நிதிக்கு மேலும் ரிம3மில்லியன் அரசாங்கம் கொடுக்கும் என பினாங்கு பிஎன் அறிவித்துள்ளது. பினாங்கில், குறிப்பாக செபறாங் பிறை தெங்கா, செபறாங் பிறை செலாத்தானில் உள்ளவர்களுக்கு அது  “நல்ல செய்தி” என்று மாநில கெராக்கான் தலைவர்…

நஜிப்: பிஎன் மேம்பாட்டுத் திட்டம் மேலானது

பாரிசான் நேசனலின் மேம்பாட்டுத் திட்டம் மாற்றுக்கட்சியினரின் மேம்பாட்டுத் திட்டத்தைவிட சிறந்தது, மேலானது என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். மாற்றுக்கட்சியினர், ஆட்சி செய்வதில் அனுபவம் அற்றவர்கள். பிஎன்னைக் காட்டிலும் அவர்களின் கூட்டணி சிறந்தது என்பதை அவர்கள் நிரூபிக்கவில்லை. பிஎன்னுக்கு 50ஆண்டுகள் ஆட்சி செய்த அனுபவம் உண்டு என்றாரவர். காலங்கள்…

‘பிஎன்-ஆதரவு’ நடப்பு விவகார கையேட்டைத் தற்காத்துப் பேசுகிறார் ரயிஸ்

தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் அவரது அமைச்சு வெளியிட்டிருக்கும் நடப்பு விவகாரங்களை விளக்கும் கையேடு அரசாங்கச் செலவில் பிஎன்னுக்கு ஆதரவாக நடத்தப்படும் ஒரு பிரச்சாரம் என்று கூறப்படுவதை மறுக்கிறார். “அது ஒரு குறுகிய, தப்பான கண்ணோட்டம். விவகாரங்கள் பற்றி விளக்குவது அமைச்சின் வேலை. கூட்டரசு அரசாங்கத்துக்கு…

சிந்தனைக்குழு: பிஎன்-னும்தான் அமெரிக்க நிதியுதவி பெறுகிறது

வெளிநாட்டு நிதி உதவி என்றதும் பிஎன் “அரண்டுபோக” வேண்டியதில்லை, ஏனென்றால் ஆளும் கூட்டணிக்கும்கூட அமெரிக்க உதவி கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது என்கிறது ஒரு சிந்தனைக்குழு. “மலேசிய என்ஜிஓ-களுக்கு வெளிநாட்டு நிதியுதவி கிடைப்பதை நினைத்து பாரிசான் எம்பிகள் அரண்டுபோய் அலற வேண்டியதில்லை”, என்று ஜனநாயக, பொருளாதார விவகாரங்கள் மீதான கழக (ஐடியாஸ்)த்…

அன்வார்: பிஎன் கூட நிழல் அமைச்சரவையைப் பெற்றிருக்கவில்லை

பக்காத்தான் ராக்யாட் நிழல் அமைச்சரவையை ஏன் அமைக்கவில்லை என்ற பிஎன் கேள்விக்குப் பதில் அளிக்காமல் அந்த எதிர்த்தரப்புக் கூட்டணி, தான் எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலங்களில் கூட நிழல் ஆட்சிமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ளது. "நிழல் அமைச்சரவை பற்றிக் குறிப்பிடும் போது யார் சிலாங்கூர் மந்திரி புசார் என்பதை…

எஸ்யூபிபி இப்போதைக்கு சரவாக் பிஎன்-னில் தொடர்ந்து இருக்கும்

எஸ்யூபிபி என்னும் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி இப்போதைக்கு மாநில பிஎன் -னில் இருந்து வரும் என அதன் தலைவர் பீட்டர் சின் அறிவித்துள்ளார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள விஷயங்கள் மீது கூட்டணித் தலைமைத்துவத்துடன் 'கலந்தாய்வு' செய்வதற்கு மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது என…

ஜனநாயகத்தில் ‘பாச்சா’ பலிக்கவில்லை; பயமுறுத்தும் தந்திரங்களைக் கையாள்கிறது பிஎன்

அயல்நாட்டு ஜனநாயக-ஆதரவு அமைப்புகள், உள்நாட்டு என்ஜிஓ--களுக்கு நிதியுதவி செய்து அரசாங்கத்தை Read More