பொதுச்சேவை ஊழியர் சம்பளத்தைத் திருத்தி அமைக்க அரசு ஆலோசனை

பொதுச்சேவை ஊழியர்களுக்கு ஐந்து விழுக்காடு ஊதிய உயர்வு கொடுப்பது உள்பட சம்பளத் திட்டத்தை மாற்றி அமைப்பது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தலைமைச் செயலாளர் அலி ஹம்சா கூறினார்.

வாழ்க்கைச் செலவு கூடி வருவதால் இந்த மாற்றம் அவசியமாகிறது என்றாரவர்.

“பிரிவுவாரியாக ஆராய்வோம். உயர்நிலையில் உள்ளவர்களுக்கு ஐந்து விழுக்காடு என்பது அதிகம் என்றால் சிறு திருத்தங்கள் செய்யப்படும்”, என்று நேற்று மலாக்கா அனைத்துலக வாணிக மையத்தில் பொதுச்சேவைத் துறை புத்தாக்க விருதளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சம்பளத் திட்டத் திருத்தம் எல்லா நிலைகளிலும் உள்ள ஊழியர்களுக்கும் பயனளிக்கும் வகையில் விரிவாக அமைந்திருக்கும் என்று அலி ஹம்சா கூறினார். சம்பளம் உச்சத்தை  எட்டி அப்படியே நின்று போயுள்ளவர்களின் நிலையும் கவனத்தில் கொள்ளப்படும்.

TAGS: