மலிவுவிலை நிலம்: டிஏபியால் திரிபுபடுத்தப்படுகிறது, சிலாங்கூர் பிஎன்

1land2008-க்குமுன் சிலாங்கூரில் பிஎன் ஆட்சி செய்த காலத்தில் அக்கூட்டணிக்கு நிலம் குறைந்த விலையில் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருப்பது பற்றி சிலாங்கூர் பிஎன் செயலாளர் முகம்மட் ஸின் முகம்மட்டிடம் வினவியதற்கு அவர் அக்கேள்விக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்தார்.

அவ்விவகாரத்தை டிஏபி அரசியல் நோக்கத்தில் திரிபுபடுத்துவதாக   வருணித்த அவர், 2008-க்குமுன் நடந்ததாகச் சொல்லப்படும் அதை இப்போது எதற்காகக் கொண்டுவர வேண்டும் என்று வினவினார்.

“2008-க்குமுன் நடந்த விவகாரங்களை எதற்காக இப்போது திரும்பிப் பார்க்க வேண்டும்.

“எத்தனையோ விவகாரங்களை நாங்கள்(பிஎன்) எதிர்நோக்கினோம். அதற்காக 2008-இல் மக்கள் எங்களைத் தண்டித்தார்கள். நாங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு அவற்றுக்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார் பிரதமர்.

“இப்போது நாங்கள் பிஎன் மத்திய அரசின் பொருளாதார உருமாற்றத் திட்டங்களினால் ஏற்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மற்றும் புத்துயிர்ப்பின் விளைவாக மக்கள்  எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்”, என்றாரவர்.

டிசம்பர் 29-இலிருந்து ஜனவரி முதல் தேதிவரை பிஎன் ஏற்பாடு செய்துள்ள கார்னிவல் சாயாங்கி சிலாங்கூர் நிகழ்வு பற்றி அறிவித்த பின்னர் பின்னர் முகம்மட் ஸின் செய்தியாளர்களிடம் பேசினார்.

1land1சிலாங்கூர் பிஎன், அரசாங்க நிலங்களை அபகரித்துக்கொண்டதாகக் குற்றம் சாட்டியவர் செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம்(இடம்). மொத்தம் 24 நிலங்களை  ஒரு சதுர அடிக்கு ரிம1 என்ற குறைந்த விலைக்கு அது வாங்கியதாக அவர் கூறினார். ஆனால், அவற்றின் சந்தை விலை குறைந்தது ரிம20 மில்லியன் என்றவர் மதிப்பிட்டார். 

கிளானா ஜெயா அம்னோவுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தில் இப்போது ஒரு கொண்டோ கட்டப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருப்பது பற்றி வினவியதற்கு அது பற்றிய விவரங்கள் தம்மிடம் இல்லை என்று முகம்மட் ஸின் கூறினார்.

“அந்நிலம் எப்போது கொடுக்கப்பட்டது, வில்லங்கம் எதுவும் உண்டா, நிபந்தனைகள் விதிக்கப்பட்டனவா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்”, என்றார்.

13வது பொதுத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் டிஏபி இதை ஒரு அரசியல் விவகாரமாக்கிவிடுமோ என்று பிஎன் பயப்படுகிறதா என்று வினவியதற்கு பிஎன் எத்தனையோ விவகாரங்களைப் பார்த்துவிட்டது என்றவர்,“நாங்கள் தேசிய நிர்மாணிப்பில் கவனம் செலுத்த விரும்புகிறோம்”, என்றார்.

 

 

TAGS: