‘செலுத்தப்பட்ட வாக்குகள் என்பதை மக்கள் மனதில் திணிக்க வேண்டாம்’

ahmad1அம்னோ உதவித் தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி விடுத்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து  பிஎன் வெற்றியின் சட்டப்பூர்வத் தன்மை மீது மக்கள் மனதில் எண்ணங்களை ‘திணிப்பதை’ நிறுத்திக்  கொள்ளுமாறு இன்னொரு அம்னோ தலைவர் பக்காத்தான் ராக்யாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மலேசியாவில் ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிகமான இடங்களை ஒருவர் வெல்ல வேண்டும். அதிகமான செலுத்தப்பட்ட வாக்குகளை அல்ல என உத்துசான் மலேசியாவில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான் கூறியுள்ளார்.

“ஆகவே ஆட்சி புரிவதற்குத் தகுதி பெற்றவர்கள், கெட்டிக்காரர்கள் என்று தங்களை அடிக்கடி கூறிக் கொள்ளும் எதிர்க்கட்சிகள், இந்த நாட்டின் சட்டங்களை உணர வேண்டும். தங்களை அவமானப்படுத்திக் கொள்வதை அவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.”

ahmad“தங்கள் மனதுக்குள் அந்த எண்ணத்தை ‘திணிப்பதை’ நிறுத்திக் கொள்ளுங்கள். மக்களை மதியுங்கள்,” என மக்கள் மனதில் ‘திணிக்க’ வேண்டாம் ‘ என்னும் தலைப்பில் எழுதியுள்ள கடுமையான கட்டுரையில் அகமட் குறிப்பிட்டுள்ளார்.

அது இரண்டு முறை குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட அன்வார் இப்ராஹிமையே குறிப்பிடுகிறது என்பது தெளிவாகும்.

தேர்தல் தொகுதிகளின் அளவை ஒரே மாதிரியாக்குவது கிராமப்புற வாக்காளர்களுக்கும்
தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களுக்கும் நியாயமாக இருக்காது என பிரதமர் துறையில் துணை
அமைச்சர் என்னும் பதவியைத் தக்க வைத்துக் கொண்டுள்ள அகமட் சொன்னார்.

“எடுத்துக்காட்டுக்கு சரவாக்கில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் ஒவ்வொன்றுக்கும் 60,000
வாக்காளர்கள் என சீராக்கினால் மக்களவையில் சரவாக் பேராளர்களுக்கு உள்ள இடங்களின்
எண்ணிக்கை 31லிருந்து 18 ஆக குறைந்து விடும். 13வது பொதுத் தேர்தலில் சரவாக்கில் மொத்த
வாக்காளர் எண்ணிக்கை 1,083,972 ஆகும்.”

ahmad2“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தீவகற்பத்தைப் போன்ற அல்லது அதை விடப் பெரிதான  தொகுதியை கவனிக்க வேண்டும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எந்த முறையைப்  பின்பற்ற விரும்பினாலும் அது அந்த உறுப்பினருக்கு மட்டுமின்றி மக்களுக்கும் நியாயமாகாது.

தீவகற்ப மலேசியாவில் உள்ள 10 மாநிலங்களில் 9ல் செலுத்தப்பட்ட வாக்குக எண்ணிக்கையில் பிஎன்
பக்காத்தானைக் காட்டிலும் கூடுதலாகப் பெற்றுள்ளதை அந்தக் கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ள  வரைபடம் காட்டியது.

பேராக் மாநிலத்தில் பிஎன் பக்காத்தானைக் காட்டிலும் 100,000 வாக்குகள் பின் தங்கியுள்ளது. ஆனால்  அது அதிகமான இடங்களை வென்றுள்ளதாக பிரகடனம் செய்யப்பட்டது.

‘புற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்காக சில்வர் நைட்டிரேட் குறைவாக இருந்தது’

அழியா மை கறை குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே மறைந்து விடுகிறது என்ற எண்னத்தையும் மக்கள்
மனதில் பக்காத்தான் பதித்து வருவதாகவும் அகமட் சொன்னார்.

சில்வர் நைட்டிரேட் குறைவாக இருந்ததே அதற்குக் காரணம் என அவர் சொன்னார். வாக்காளர்களின்
ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவ்வாறு செய்யப்பட்டது என்றார் அவர்.ahmad3

“சில்வர் நைட்டிரேட் அதிகமாக இருந்தால் ஏற்படக் கூடிய புற்றுநோய், சிறுநீரக கோளாறுகள்  ஆகியவற்றிலிருந்து வாக்காளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு நிபுணர்கள் வழங்கிய யோசனையை  கருத்தில் கொண்ட சுகாதார அமைச்சின் மருத்துவ நிபுணர்களுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் பிஎன்
முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.”

ஒரு விழுக்காடு சில்வர் நைட்டிரேட்டைக் கொண்ட மையைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு  செய்தது. அந்த அளவு மையின் 30 முதல் 70 விழுக்காடு வரையில் வாக்காளர்களுடைய விரலில் 10  மணி நேரத்துக்கு மட்டும் இருக்கப் போதுமானது.

“அதை விடக் கூடுதலாக இருந்தால் புற்று நோய்க்கான அபாயம் அதிகரிக்கும்,” என அகமட்  சொன்னார்.

அதே நேரத்தில் மின்னியல் பட்டியலிலும் வாக்காளர் பட்டியலிலும் வாக்காளர்களுடைய பெயர்கள் மீது  கோடு போடப்படுவதால் தனிநபர்கள் ஒரு முறைக்கு மேல் வாக்களிக்க முடியாது என்றார் அவர்.

எனவே தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொண்டு ஜனநாயக நடைமுறையை மதிக்குமாறு மக்கள்
எதிர்க்கட்சிகளை நெருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

“அரசியல் விளையாட்டு போதும். தலைவர்கள் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள்
விரும்புகின்றனர். உங்கள் அரசியல் ஆசைக்குள் அவர்களை இழுக்க வேண்டாம்,” என்றும் அகமட்
சொன்னார்.

TAGS: