‘நேர்மை பற்றாக்குறையாக இருக்கும்போது பிஎன்-னுக்கு ஆதரவு சரிகிறது’

Rajaநேர்மை குறித்த எதிர்பார்ப்புக்களுக்கும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கும் இடையிலான வேறுபாடு பிஎன் வழி நடத்தும் கூட்டரசு அரசாங்கத்திற்கான ஆதரவு சரிவதற்கான காரணம் என  பேராக் அரசப் பேராளர் ராஜா நஸ்ரின் ஷா கூறியிருக்கிறார்.

2004 பொதுத் தேர்தலில் அப்துல்லா அகமட் படாவி தலைமையில் பிஎன் மகத்தான வெற்றி பெற்றதைக்
குறிப்பிட்ட ராஜா நஸ்ரின், அதற்கு 2003ம் ஆண்டு பொறுப்பேற்ற அப்துல்லா நேர்மைக்கும் ஊழல்  தடுப்பு நடவடிக்கைகளுக்கும் தமது திட்டங்களில் இடம் கொடுத்தது காரணம் எனச் சொன்னார்.

மலேசிய நேர்மைக் கழகம் அமைக்கப்பட்டது. போலீஸ் படை நடவடிக்கைகள் மீது அரச விசாரணை
ஆணையம் அமைக்கப்பட்டது.

கங்கார் நகராட்சி மன்றத் தலைவர், பெர்வாஜா தலைவர் எரிக் சியா, முன்னாள் கிராமப் புற மேம்பாட்டு அமைச்சர் கசித்தா கடாம் ஆகிய மூன்று பிரபலமான தனிநபர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பெரிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை

Raja1“பொது மக்கள் அந்தச் சீர்திருத்தங்களை வரவேற்றனர். அது 11வது பொதுத் தேர்தலில் எதிரொலித்தது.
2004-ல் பிஎன் 198 இடங்களையும் மொத்த செலுத்தப்பட்ட வாக்குகளில் 63.9 விழுக்காட்டையும்
பெற்றது. வாக்குறுதிகள் மக்கள் நம்பிக்கையை வலுப்படுத்தின. அது பிஎன் -னுக்கான ஆதரவாக
மாறியது,” என அரசப் பேராளர் சொன்னார்.

“12வது பொதுத் தேர்தலில் (2008ல்) தங்களது பெரிய எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதை மக்கள் உணர்ந்தனர். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என மக்கள் அறிந்தனர். சாதனைகள் குறித்த பேச்சுக்களும் குறியீடுகளும் வாழ்க்கை உண்மை நிலைகளுக்கு ஏற்ப இல்லாததால் அவர்கள் ஐயம் கொள்ளத் தொடங்கினர்.”

ராஜா நஸ்ரின் இன்று புத்ராஜெயாவில் நேர்மை ஆணையம் ஏற்பாடு செய்த நேர்மை மாநாட்டில்
பேசினார். நேர்மையைப் பொறுத்த வரையில் தலைமைத்துவம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக அவர் சொன்னார்.

Raja2நபிகள் நாயகம் மற்றும் கடந்த காலத் தலைவர்களான துங்கு அப்துல் ரஹ்மான், அப்துல் ரசாக்  ஹுசேன், ஹுசேன் ஒன் போன்றவர்கள் ஏற்படுத்தியுள்ள எடுத்துக்காட்டிலிருந்து கற்றுக் கொள்ளுமாறு  அவர் இன்றைய தலைவர்களைக் கேட்டுக் கொண்டார்.

அச்சத்திலிருந்து விடுபட்ட, அரசியல் தலையீடு இல்லாத சட்ட அமலாக்கத்தின் மூலம் நேர்மையான  நடைமுறைகளுக்கு ஆதரவு அளிக்கலாம் என்றும் ராஜா நஸ்ரின் சொன்னார்.

“ஊழலை துடைத்தொழிக்கும் தலைவரும் நிர்வாகத்திலிருந்து ஊழலை அகற்றும் துணிச்சலைக் கொண்ட  தலைவரும் நிர்வாகத்தின் நிலையை வலுப்படுத்துவர். அதனால் அரசாங்கத்திற்கு நல்ல தோற்றம்  கிடைக்கும்.”

“இது தலைவருக்கும் அவரது நேர்மைக்கும் மக்கள் கொடுக்கும் மரியாதையை உயர்த்தும்.”

TAGS: