வேட்பாளர் நியமன மையத்தில் அன்வார் கேலி செய்யப்பட்டார்

anwar1982ம் ஆண்டு தொடக்கம் தமது சொந்த மாநிலத்தில் போட்டியிடும் பெர்மாத்தாங் பாவ் வேட்பாளர் அன்வார்  இப்ராஹிமை வேட்பாளர் நியமன மையத்துக்கு வெளியில் பிஎன் ஆதரவாளர்கள் இன்று அவமானப்படுத்தியுள்ளனர்.

பெராபிட்டில் உள்ள Institut Kemahiran Belia Negara-வில் தேர்தல் அதிகாரி யூஸ்னி இஸ்மாயில் அன்வார்  பெயரையும் அவரது கட்சி பெயரையும் அறிவித்த போது அவர்கள் கேலி செய்து கூச்சலிட்டனர்.

பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதிக்கும் அதன் கீழ் செபராங் ஜெயா, பெர்மாத்தாங் பாசிர், பெனாந்தி ஆகிய உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை யூஸ்னி அறிவித்தார்.

anwar1அன்வார் மற்றும் அவரது சக வேட்பாளர்களுடைய பெயர்கள் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் பிஎன் ஆதரவாளர்கள் “Boo! Pungkok (பின்புறம்),” எனக் கூச்சலிட்டனர்.

அன்வாரும் அவரது சகாக்களான டாக்டர் அபிப் பஹார்டின்(செபராங் ஜெயா) நோர்லேலா அரிபின் ( பெனாந்தி) சாலே மான் (பெர்மாத்தாங் பாசிர்) ஆகியோரும் காலை மணி 9.20க்கு தங்கள் வேட்பு மனுக்களை  சமர்பித்தனர்.

அன்வார், முன்னாள் டெலிகோம் மலேசியா இயக்குநர் மஸ்லான் இஸ்மாயில், டாக்டர் அப்துல்லா ஸவாவி  சம்சுதின் ஆகியோருடன் மும்முனைப் போட்டியில் ஈடுபட்டுள்ளார்.

பினாங்கு மாநில பிகேஆர் இளைஞர் தலைவரான அபிப், அம்னோவின் முகமட் நாசிர் அப்துல்லா, சுயேச்சை வேட்பாளரான சம்சுட் தாஜ்ரெப் ஆகியோருடன் மோதுகிறார்.

பெனாந்தி, பெர்மாத்தாங் பாசிர் ஆகியவற்றில் நேரடிப் போட்டியாகும்.