‘பாத்திமா இஸ்மாயில்’ என்ற பெயரில் 900 வாக்காளர்கள்

Election Commission'sகெடா, கிளந்தான், பாகாங், திரங்கானு ஆகியவற்றில் ஒரே பெயரைக் கொண்ட வாக்காளர்கள் பொருத்தமற்ற  முறையில் அதிகமான எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். அவர்களில் ‘பாத்திமா இஸ்மாயில்’ என்ற பெயரைக்  கொண்ட 900 வாக்காளர்களும் அடங்குவர்.

அதில் 14 ‘பாத்திமா இஸ்மாயில்கள்’ ஒரே பிறந்த தேதியைக் கொண்டுள்ளனர். அவர்களில் பத்துப் பேருக்கு ஒரே மாநிலத்தில் அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.’

“அனைத்து முக்கியமான பெயர்களிலும் நாங்கள் அந்த பாணியை கண்டு பிடித்துள்ளோம். ‘இஸ்மாயில்’ என்ற பெயரைக் கொண்ட இரண்டு ஆடவர்களுக்கு ஒரே நாளில் புதல்விகள் பிறந்துள்ளனர். அதுவும் ஒரே கிராமத்துக்குள்,” என மெராப் எனப்படும் மலேசிய வாக்காளர் பட்டியல் ஆய்வுத் திட்டத்தைச் சேர்ந்த ஆய்வு உதவியாளரான லீ வீ தாக் சொன்னார்.

இதனிடையே சபாவிலும் சரவாக்கிலும் 100 வயதைத் தாண்டிய வாக்காளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சபாவில் 1,062 வாக்காளர்களும் சரவாக்கில் 475 வாக்காளர்களும் 100 வயதைத் தாண்டியவர்கள்.

100 வயதைத் தாண்டியவர்கள் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் இருப்பதும் அந்த வாக்காளர்கள்  முதிர்ந்த வயதில் வாக்காளர்களாக பதிந்து கொண்டிருப்பதும் வினோதமாக இருப்பதாக லீ சொன்னார். சபாவில்  நூறு வயதைத் தாண்டிய வாக்காளர்கள் சராசரியாக 84வது வயதிலும் சரவாக்கில் சராசரியாக 65வது வயதிலும்  வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

TAGS: