13வது பொதுத் தேர்தல் : தற்போதைய அதிகாரப்பூர்வமற்ற நிலவரம்

இரவு மணி 2.30: நாடாளுமன்ற இருக்கைகள் பாரிசான் 129, பக்கத்தான் 80.

பேராக் மற்றும் திரங்கானு மாநிலங்கள்

இரவு மணி 2.03: மிகக் குறைவான பெரும்பான்மையில் பாரிசான் பேராக்  மாநில ஆட்சியை தொடரும் (பிஎன் 31, பக்கத்தான் 28).  திரங்கானு மாநிலத்தில் அதற்கு  இரண்டு பக்கத்தானைவிட இரு கூடுதல் இருக்கைகள் மட்டுமே கிடைத்துள்ளன (பிஎன் 17, பக்கத்தான் 15). 

மஇகா வேட்பாளர்கள்

இரவு மணி 2.00: நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்ட 9  மஇகா வேட்பாளர்களில் ஜி. பழனிவேல், எஸ். சுப்ரமணியம், எம். சரவணன் மற்றும் பி.கமலநாதன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மலாக்கா முதல்வர் தோற்கடிக்கப்பட்டார்

இரவு மணி 1.35:மலாக்கா மாநில முதலமைச்சர் முகமட் அலி ருஸ்தாம் 5,447 வாக்குகள் வித்தியாசத்தில் பிகேஆரின் சம்ஷூல் இஸ்கந்தர் முகமட் அகினிடம் தோல்வியுற்றார்.

இரவு மணி 1.25: பாரிசான் 122 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. பக்கத்தான் 71 இருக்கைகளைப் பிடித்தது (டிஎபி 35, பிகேஆர் 20 மற்றும் பாஸ் 16).

இரவு மணி 1.22: தேர்தல் முடிவுகள், குறிப்பாக சிலாங்கூரை பிஎன் கைப்பற்ற தவறியது, குறித்து கருத்துரைத்த பிஎன் தலைவர் நஜிப் அது “சீன சுனாமி”யின் விளைவு என்றார்.

இரவு மணி 1.20: 13 ஆவது பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்திருப்பதைத் தொடர்ந்து அக்கட்சி அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் ஏற்காது என்று அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் என்று டிவிட்டர் செய்துள்ளார்.

 பிஎன் வெற்றி

இரவு மணி 1.15 அளவில் பாரிசான் தலைவர் நஜிப் ரசாக் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில் பாரிசான் இன்னும் 7 தொகுதிகளில் வென்று மொத்தம் 119 இருக்கைகளையும் பக்கத்தான் மொத்தம் 67 இருக்கைகளையும் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இரவு மணி 12.55:   பிஎன் 112 தொகுதிகளிலும், டிஎபி 28, பிகேஆர் 18 மற்றும் பாஸ் 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன என்று    தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது பிஎன் அரசாங்கத்தை அமைப்பதற்கான தகுதியை பிஎன்னுக்கு அளிக்கிறது.

நள்ளிரவு மணி 12.14: பக்கத்தான் 18 இருக்கைகளை பிஎன்னிடமிருந்து கைப்பற்றிய வேளையில் 4 இருக்கைகளை பிஎன்னிடம் இழந்துள்ளது.

பிஎன்னிடமிருந்து பக்கத்தான் கைப்பற்றியவை:

1. ஸ்தாம்பின் (டிஎபி)
2. சாரிகெய் (டிஎபி)
3. லானாங் (டிஎபி)
4. குளுவாங் (டிஎபி)
5. கம்பார் (டிஎபி)
6. மிரி (பிகேஆர்)
7. லுமுட் (பிகேஆர்)
8. கெலாங் பாத்தா (டிஎபி)
9. சாண்டாக்கான் (டிஎபி)
10. சிபு (டிஎபி)
11. துவாரான் (பிகேஆர்)
12. பெனாம்பாங் (பிகேஆர்)
13. புக்கிட் கட்டில் (பிகேஆர்)
14, தெமெர்லோ (பாஸ்)
15. அலோர் செதார் (பிகேஆர்)
16. பாண்டான் (பிகேஆர்)
17. கோலதிராங்கானு (பாஸ்)
18. டுங்குன் (பாஸ்)

பக்கத்தானிடமிருந்து பிஎன் கைப்பற்றியவை:

1. தித்திவங்சா (பாஸ்)
2. கோலசிலாங்கூர் (பாஸ்)
3. பெண்டாங் (பாஸ்)
4. பாலிக் புலாவ் (பிகேஆர்)

 

பக்கத்தான் இரு கூடுதல் இருக்கைகளுடன் சிலாங்கூர் மாநிலத்தை தக்கைவைத்துக் கொண்டது

இரவு மணி 11.29: கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ பக்கத்தான் சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது என்று கூறினார். மேலும், கூடுதலாக இரு இருக்கைகளையும் பெற்றுள்ளது என்றாரவர்.

இதனை சிலாங்கூர் மாநில ஆட்சிமன்றகுழு உறுப்பினர் இயான் யோங் ஹியான் உறுதிப்படுத்தினார். பக்கத்தானுக்கு 38 இருக்கைகளும், பாரிசானுக்கு 18-டும் இருப்பதாக அவர் கூறினார்.

இரவு மணி 11.03: பிகேஆரின் டாக்டர் டான் கீ குவோங் சுமார் 5,000 வாக்கு பெரும்பான்மையில் வங்சா மாஜு தொகுதியைக் கைப்பற்றினார்.

பிகேஆரின் அப்துல் காலிட் இப்ராகிம் 10,000க்கு மேற்பட்ட வாக்கு பெரும்பான்மையில் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாக அவரின் ஊடகச் செயலாளர் கூறினார்.

இரவு மணி 11.07: செலின்சிங், குனோங் செமெங்கோல், செங்காட் ஜெரிங், சுங்கை ரப்பாட், செலாமா மற்றும் திதி செரோங் ஆகிய மாநில இருக்கைகளை வென்றுள்ளதாக பேராக் பாஸ் அறிவித்தது.

கோலா செபெதாங், கோல குராவ், தேஜா, சிம்பாங் புலாய் மற்றும் ஹூத்தான் மெலிந்தாங் ஆகிய தொகுதிகளை பிகேஆர் கைப்பற்றியுள்ளது என்றும் பாஸ் அறிவித்தது.

இரவு மணி 10.52: ஷா அலாம் நாடாளுமன்ற தொகுதியில் பாஸ் கட்சியின் வேட்பாளர் காலிட் சாமாட்  பெர்காசாவின் உதவித் தலைவர் சுல்கிப்லி நோடினை 10, 751 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இரவு மணி 10.30: பேராக் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் நிஜார் ஜமாலுடின் அவரது சங்காட் ஜெரிங் சட்டமன்ற தொகுதியில் 1, 206 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

இரவு மணி 10.29: டிஎபி லிம் கிட் சியாங் கெலாங் பத்தா நாடாளுமன்ற தொகுதியில் பிஎன் வேட்பாளர் அப்துல் கனியை 15,758 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இரவு மணி 10.29: கிளந்தான் மாநிலத்தை பாஸ் தக்கவைத்துக் கொண்டது. அக்கட்சி 23 இடங்களில் வெற்றி கண்டது. அந்த மாநிலத்தில் 45 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன.

இரவு மணி 10.19: மஇகா தலைவர் ஜி. பழனிவேல் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் டிஎபியின் எம். மனோகரனை 80 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இரவு மணி 10.14: மலேசிய சோசலிசக் கட்சியின் டாக்டர் தேவராஜ் ஜெயக்குமார் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் பாரிசான் வேட்பாளர் எஸ்.கே. தேவமணியை 4,776 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

 

 

TAGS: