‘சந்தேகத்துக்குரிய வாக்காளர்களைக் பொதுமக்கள் கைது செய்வர்’

1 arrestநாளைய வாக்களிப்பில் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களிப்பு மோசடியில் ஈடுபடுவதாகச்  சந்தேகிக்கப்படும் நபர்களைப்  பொதுமக்கள் கைது செய்வர். இது குடியாளர்-கைது (citizen’s arrest) எனப்படும்.

இதனைத் தெரிவித்த அத்தொகுதி நடப்பு எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, கிள்ளான் வாக்காளர் பட்டியலில் 2,000 சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பதாக தாமும் தம் குழுவினரும் அடையாளம் கண்டிருப்பதால் தன்மூப்பாக  இப்படிப்பட்ட நடவடிக்கையில் இறங்குவது அவசியமாகிறது என்றார்.

இவர்களின் பெயர்ப்பட்டியல் ஒன்று நடைமுறை பண்பு கருதி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாரவர். ஆனால், அது நடவடிக்கை எடுக்கும் என அவர் எதிர்பார்க்கவில்லை.

“அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். ஏனென்றால், சட்டப்படி வாக்காளர் பட்டியலில் பதிவான பெயர்களை நீக்க முடியாது”, என்று சந்தியாகு மலேசியாகினியிடம் இன்று தெரிவித்தார்.

எனவே, அப்பெயர்கள் சந்தியாகுவின் குழுவைச் சேர்ந்த  தேர்தல் ஏஜெண்டுகளுக்குக் கொடுக்கப்படும். அவர்கள், அப்பட்டியலில் உள்ளவர்கள் வாக்களிக்க முற்பட்டால் குடியாளர்-கைது நடவடிக்கையில் இறங்குவர்.

 

 

TAGS: