புல்லைக் கொண்டு கூட அழியா மையை நீக்கி விட முடியும்!

ink13வது பொதுத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அழியா மை உண்மையில் அழிக்க முடியாது என தேர்தல் ஆணையம் வாக்குறுதி அளித்த போதிலும் நாடு முழுவதும் வாக்காளர்கள் அதனை எளிதாக அகற்றியுள்ளனர்.

சிலர் புல்லைப் பயன்படுத்திக் கூட அந்த மையை அழித்துள்ளனர்.

சபா பெனாம்பாங்கில் வாக்குச் சாவடிகளிலிருந்து வெளியில் வந்த வாக்காளர்கள் வெறும் புற்களைப் தேய்த்ததும் மை கறை போய் விட்டதாக மலேசியாகினி நிருபர் அய்டிலா ரசாக் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 30ம் தேதி முன்கூட்டியே வாக்களித்த, அங்கு கடமையில் இருந்த போலீஸ்காரர்கள் விரல்களிலும் மை கறைகள் காணப்படவில்லை. என்றாலும் சிலரது கை நகங்களில் சிறிதளவு கறைகள் தென்பட்டன.

அந்த அழியாமை குறைந்தது ஏழு நாட்களுக்கு இருக்கும் என்று இசி உறுதியாகக் கூறியுள்ளது.

மோயோக் தொகுதிக்கான ஸ்டார் வேட்பாளர் பெர்னார்ட் லாரன்ஸும் தமது விரலில் தடவப்பட்ட மை காணாமல் போய் விட்டதை அறிந்து கொண்டார்.

“தாம் எதுவும் செய்யவில்லை.” என அவர் சொன்னார்.

தண்ணீரில் கழுவியதும் போய் விட்டது

பாஸ் ஆன்மீகத் துணைத் தலைவர் ஹரோன் டின் -னும் அதே கதையைச் சொன்னார். வெறும் தண்ணீரில் கழுவியதும் ‘அழியா மை’ நீங்கி விட்டதாக அவர் சொன்னார்.

அவர் அந்த விவரங்களை படம் எடுத்துள்ள இணையத்தில் சேர்த்துள்ளார்.

“நான் காலை மணி 8.25க்கு வாக்களித்தேன். என் விரலில் மை தடவப்பட்டது. 8.50க்கு வீடு திரும்பியதும் மையைக் கழுவ முயன்றேன். அந்த மை கறை நீங்கி விட்டதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். எந்த ரசாயனப் பொருளையும் பயன்படுத்தாமல் வெறும் தண்ணீரால் கழுவினேன். அந்த மை கறை முற்றாகப் போய் விட்டது.

லெம்பா பந்தாயில் ஜாலான் செண்டாராய் வாக்குச் சாவடியிலும் அழியா மையைக் கழுவ முடியும் என நுழைவாயில்களில் நின்று கொண்டிருந்த பக்காத்தான் தேர்தல் ஊழியர்களிடம் புகார் செய்தனர்.

குளோரக்ஸைக் கொண்டு கறையை நீக்க முடியும்

சாதாரண சமையலறை குளோரக்ஸைக் கொண்டு கறையை முற்றாக நீக்கி விட முடியும் என சில வாக்காளர்கள் கூறினர்.

வாக்களித்த பின்னர் தாம் அழியா மையை அழித்த முறையை விளக்கும் வீடியோவை யூ டியூப் இணையத் தளத்தில் ஒரு வாக்காளர் சேர்த்துள்ளார்.

பேராக் பீடோரைச் சேர்ந்த அந்த வாக்காளர் அதற்கு பல நிமிடங்கள் பிடித்ததாக எழுதியுள்ளார்.

TAGS: