நுசா ஜெயா வாக்குச் சீட்டுக்கள் மகோட்டாவுக்கான வாக்குப் பெட்டியில் காணப்பட்டன

nusaநுசா ஜெயா சட்டமன்றத் தொகுதிக்கான நான்கு வாக்குச் சீட்டுக்கள் அந்தத் தொகுதியிலிருந்து முற்றிலும்  மாறுபட்ட தொகுதிக்கான வாக்குப் பெட்டியில் கண்டு பிடிக்கப்பட்டது மீது போலீசில் புகார்  செய்யப்பட்டுள்ளது.

மே 5ம் தேதி முன் கூட்டியே செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்ட போது மகோட்டா சட்டமன்றத்  தொகுதியில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கையில் பாஸ் முகவராக செயல்பட்ட ஒருவர் அதனைக் கண்டு  பிடித்ததாக ஜோகூர் பாஸ் இளைஞர் தலைவர் கைருல் பைசி அகமட் கமில் சொன்னார்.

நுசா ஜெயாவுக்கான பாஸ் வேட்பாளர் சலாஹுடின் அயூப்பின் பெயர் வாக்குச் சீட்டுக்களில் காணப்பட்ட போது முகவர் அதனை உணர்ந்ததாக குளுவாங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் கைருல் பைசி நிருபர்களிடம் கூறினார்.

“அந்த முகவர் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் புகார் செய்தார். ஆனால் அந்த வாக்குச் சீட்டுக்களை நுசா ஜெயா வாக்குகளாக எடுத்துக் கொள்ளாமல் செல்லாத வாக்குகள் என அவர்கள் முடிவு செய்து விட்டனர்.”

“நாங்கள் எங்களுடைய வழக்குரைஞர்களுடன் கலந்தாய்வு செய்த பின்னர் போலீசில் புகார் செய்வது என முடிவு செய்தோம். சீல் வைக்கப்பட்டு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நுசா ஜெயாவுக்கான முன்கூட்டியே செலுத்தப்பட்ட வாக்குகளைக் கொண்ட பெட்டி ‘சேதப்படுத்தபட்டிருக்கலாம்”, என்றார் அவர்.

சலாஹுடினுக்குச் சாதகமாக இருந்த அந்த வாக்குச் சீட்டுக்களை பாஸ் முகவர் குறிப்பு எடுத்துக்
கொள்ளவில்லை. நுசா ஜெயா தொகுதியில் சலாஹுடின் பிஎன் வேட்பாளர் ஜைனி பாக்காரிடம் 2,201
வாக்குகளில் தோல்வி கண்டார்.

மகோட்டா குளுவாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. அதே வேளையில் நுசா ஜெயா கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

TAGS: