13வது பொதுத் தேர்தலில் மொத்தம் உள்ள 12,992,661 வாக்காளர்களில் 80 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்
அந்தத் தகவலை தேர்தல் ஆணையம் இன்று மாலை வெளியிட்டது.
மலேசிய வரலாற்றில் இவ்வளவு அதிகமான விழுக்காட்டினர் வாக்களித்துள்ளது இதுவே முதன் முறையாகும்.
1964ம் ஆண்டு 78.9 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதுடன் ஒப்பிடுகையில் 13வது தேர்தலில் வாக்களித்தவர்
விகிதம் புதிய சாதனை ஆகும்.
காலை எட்டு மணிக்கு திறக்கப்பட்ட 8,245 வாக்குச் சாவடிகளில் பெரும்பாலானவை மாலை 5 மணிக்குத்
திட்டமிடப்படி மூடப்பட்டதாக இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
மாலை மணி 5.30 வாக்கில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியதாகவும் பின்னர் அவை ஒன்று
சேர்க்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே புத்ரா உலக வாணிக வளாகத்தில் அமைந்துள்ள அம்னோ தலைமையகத்துக்குள் நுழைவதற்கு மலேசியாகினி நிருபர் அனுமதிக்கப்படவில்லை. அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அம்னோ கட்டிடத்துக்குள் நுழைவதற்கு அந்த செய்தி இணையத் தளத்துக்கு அனுமதி இல்லை என அம்னோ தொடர்புக் குழு மலேசியாகினி நிருபரிடம் கூறியது. பின்னர் அந்த நிருபர் ரேலா அதிகாரிகளினால் கட்டிடத்துக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டார்.
அதுலே எத்தனை bangla,paki,indon,pinoy,africa,and etc etc….? எங்கள பார்த்த எப்படி தெரியுது உன் அம்னோ/பின் திருட்டு கூட்டத்திற்கு? Tribunal காத்துகிட்டு இருக்கு!