தேர்தல் ஆணையம் : வாக்காளர் பட்டியலில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் யாருமில்லை

1ecவாக்குச் சாவடிகளில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் காணப்பட்டதாக புகார்கள் கொடுக்கப்பட்ட போதும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களைக் கொண்ட அனைவரும் குடிமக்கள் என்றும் அதனால் அவர்கள் சட்டபூர்வ வாக்காளர்கள் என்றும் தேர்தல் ஆணையத் தலைவர் (இசி) வலியுறுத்துகிறார்.

“எங்கள் பட்டியலில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் யாரும் இல்லை. நாங்கள் எங்கள் வாக்காளர் பட்டியலை தேசியப் பதிவுத் துறையுடன் இணைத்துள்ளோம்.”

“எங்கள் பட்டியலில் உள்ள அனைவரும் குடிமக்கள் என்பதை அது உறுதி செய்கின்றது,” என அவர் புத்ராஜெயாவில் இசி தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

இன்று காலை Sekolah Kebangsaan Taman Segar-ல் காலை 9 மணிக்கு வாக்களிக்க முயன்ற அந்நியரைப் போன்று தோற்றமளித்த சந்தேகத்துக்குரிய ஒரு நபரை டிஏபி செராஸ் வேட்பாளர் தான் கோக் வாய் தடுத்து நிறுத்தினார்.

அந்த நபர் தாம் மலேசியர் என்பதை நிரூபிக்க தமது மை கார்டைக் காண்பித்தார் என்றும் தான் கோக் வாய் சொன்னார்.

என்றாலும் அந்த நபரை நம்பாமல் போலீசாரிடம் அவரை ஒப்படைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாக்காளர்களுடைய தோற்றத்தை வைத்து அவர்களை மதிப்பீடு செய்ய வேண்டாம் என அப்துல் அஜிஸ் சொன்னார்.

ஒருவர் மை கார்டை வைத்திருந்து அவர் பெயர் பட்டியலில் இருந்தால் அவர் வாக்களிக்க முடியும் என்றும் அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.

என்றாலும் வாக்களிப்பதற்கு உதவியாக அந்நியர்களுக்குச் சட்டவிரோதமாக அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இசி தலைவருடைய விளக்கம் பதில் அளிக்கவில்லை.

அந்த விவகாரம் மீதான சபா அரச விசாரணை ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட சட்ட விரோத வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களைப் போன்ற நூற்றுக்கணக்கான பெயர்கள் கிள்ளான் வாக்காளர் பட்டியலில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமையன்று நடப்பு கிள்ளான் எம்பி சார்லஸ் சண்டியாகோ தெரிவித்திருந்தார்.

TAGS: