‘வாக்களிக்கும் என் உரிமையை யாரோ திருடி விட்டார்கள்’

கூலாயிலும் கிள்ளானிலும் பல வாக்காளர்கள் தங்கள் பெயரில் யாரோ ஒருவர் வாக்களித்து விட்டதால் தாங்கள் வாக்களிக்க முடியாமல் போய் விட்டதாக கூறிக் கொண்டுள்ளனர்.

அவர்கள் இசி என்ற தேர்தல் ஆணையத்தில் புகார் செய்கின்றனர்.

கூலாயில் வாக்களிப்பதற்காக காலை 10 மணிக்கு SJK(C) Batu வாக்குச் சாவடிக்கு 42 வயதான சாய் சியூ பின் என்பவர் சென்றார். ஆனால் தமது பெயரை வேறு யாரோ ஒருவர் பயன்படுத்தி விட்டதை அறிந்தார்.

“அரசியல் கட்சிகள் எனக்கு உதவுவதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் என் உரிமைகளுக்குப் போராடுவேன்,” என சாய் சொன்னார்.

தமது அடையாளத்தை உறுதி செய்ய இசி அதிகாரி பாரம் 10ஐ பூர்த்தி செய்ததாக அவர் சொன்னார். ஆனால் சர்ச்சை ஏற்பட்டால் வாக்களிக்க அனுமதிக்கும் பாரம் 11ஐ தருமாறு தாம் வலியுறுத்தியதாக சாய் குறிப்பிட்டார்.

தமக்கு இது போன்று ஐந்து முதல் ஆறு புகார்கள் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் இப்போது தமது சேவை மய்யத்தில் காத்துக் கொண்டிருப்பதாகவும் டிஏபி கூலாய் வேட்பாளர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

பாரம் 11 மறுக்கப்பட்டது

10லியூ ஆ மோய் என்பவர் வாக்களிக்க SMK Kulai Besar-க்குக் காலை மணி 10.30 வாக்கில் சென்றார். ஆனால் அவர் ‘ஏற்கனவே வாக்களித்து விட்டதாக’ தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.

நான் லியூ-வின் விரலைச் சோதித்தேன். அதில் அழியா மை கறைகள் எதுவுமில்லை என தியோ டிவிட்டரில் செய்தி அனுப்பியுள்ளார்.

70 வயதான லியூ ஏற்கனவே பல முறை வாக்களித்துள்ளார். தாம் இன்று வாக்களிக்க முடியாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தேர்தல் அதிகாரி அவருக்கு பாரம் 11ஐ கொடுக்கவில்லை. காரணம் அந்த ஆவணத்தை அவர் படிக்க முடியாது என அவர் சொன்னார்.

74 வயதான் சூ மோய் மோய் என்பவரும் SMK Kulai Besar-ல் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. காரணம் அவர் ஏற்கனவே வாக்களித்து விட்டதாக அங்குள்ள இசி அதிகாரிகள் கூறியதாகும்.

கிள்ளானில் தங்கள் பெயரில் மற்றவர்கள் வாக்களித்துள்ளதாக இரண்டு வாக்காளர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளதாக பிகேஆர் கட்சியின் டாக்டர் சேவியர் ஜெயகுமார் டிவிட்டரில் செய்தி அனுப்பியுள்ளார்.

“பாரம் 11ஐ பயன்படுத்தி உண்மையான வாக்காளரை வாக்களிக்க அனுமதியுங்கள்,” என அவர் கேட்டுக் கொண்டார்.

TAGS: