‘சந்தேகத்துக்குரிய வாக்காளர் வாக்களித்த பின்னர் பணம் கோரினார்’

14வாக்களித்த பின்னர் தங்கள் சாவடியில் பணம் கேட்ட சபாவைச் சேர்ந்த சந்தேகத்துக்குரிய வாக்காளர் ஒருவரை சிலாங்கூர் பண்டானில் உள்ள பக்காத்தான் ராக்யாட் தேர்தல் ஊழியர்கள் விசாரித்துள்ளனர்.

Taski Abim Taman Mawar வாக்குச் சாவடிக்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த பிகேஆர் சாவடியில் பிற்பகல் ஒரு மணி வாக்கில் மஸ்லான் சுல்கிப்லி என்ற அந்த நபர் 700 ரிங்கிட் கோரியதாக பண்டான் பிகேஆர் வேட்பாளர் ராபிஸி இஸ்மாயில் சொன்னார்.

அவர் தாமான் மாவாரில் உள்ள ஒரு முகவரியைக் கொண்ட அடையாளக் கார்டு உட்பட பல ஆவணங்களையும் கோத்தா கினாபாலுவிலிருந்து கோலாலம்பூருக்கான ஒரு வழி விமானப் பயண டிக்கெட்டையும் காட்டினார்.

ஆனால் நெகாரா கூ-வைப் பாடுமாறு கேட்ட போது அவரால் அது முடியவில்லை. அத்துடன் தமது அடையாளக் கார்டில் எழுதப்பட்டுள்ள முகவரியையும் அவரால் சொல்ல முடியவில்லை.”

“நீங்கள் என்னைக் கேட்டால், அவர் இந்தோனிசியர் என நான் சந்தேகிக்கிறேன். அவர் சபாவைச் சேர்ந்த ஒர் இந்தோனிசியர் எனத் தோன்றுகிறது,” என மஸ்லானை அமைதியாக வெளியேறுமாறு அனுமதித்த பின்னர் ராபிஸி சொன்னார்.

TAGS: