அம்பிகா: ஆர்சிஐ பற்றி விவாதிப்பது இடையூறு செய்வதாக இருக்காது

ambigaசபாவில் ‘வாக்குகளுக்காக குடியுரிமை’ என்னும் குற்றச்சாட்டுக்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை  ஆணையம் குறித்து விவாதிப்பதை சட்ட நடைமுறைகளுக்கு இடையூறு செய்வதற்கு (‘sub judice’) ஒப்பாகும்  எனக் கூறிக் கொண்டு அதன் தொடர்பில் பொதுமக்கள் விவாதம் நடத்துவதை கட்டுப்படுத்த முடியாது என  பெர்சே இணைத்தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார்.

‘sub judice’ என்பது நீதிபதிகளுடைய முடிவுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது போன்ற சட்ட நடைமுறைகளில்  தலையிடுவது எனப் பொருள்படும் என அந்த முன்னாள் வழக்குரைஞர் மன்றத் தலைவர் சொன்னார்.

“ஆர்சிஐ குறித்து கருத்துச் சொல்வது, நியாயம் செய்கின்றவர்கள் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என
நான் உங்களுக்குச் சொல்ல முடியும். அவர்கள் அனுபவம் வாய்ந்த மக்கள். முன்னாள் சபா, சரவாக் தலைமை
நீதிபதி அதில் இடம் பெற்றுள்ளார்,” என அம்பிகா இன்று நிருபர்களிடம் கூறினார்.

ஆர்சிஐ மீது கருத்துச் சொல்வது அதன் நடவடிக்கைகளில் தலையிடுவதாகக் கருதப்படும் என்பதால் பொது
மக்கள் அதனைத் தவிர்க்க வேண்டும் என சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கடந்த வாரம்
கூறியிருப்பது பற்றி அவர் கருத்துரைத்தார்.

 

TAGS: