அம்பிகா: நன்றி, ஆனால் அரசு நியமனத்தை ஏற்பதற்கில்லை

1 ambikaகுற்றத் தடுப்புச் சட்டத்தின்(பிசிஏ)கீழ் கைது செய்யப்படுவோரின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மூவரடங்கிய வாரியத்தில் ஒருவராக  பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனை நியமனம் செய்வது பற்றி ஆராய அரசு தயாராகவுள்ளது.  ஆனால், அந்நியமனத்தை ஏற்க அம்பிகா விரும்பவில்லை.

அவ்வாரியத்துக்கு மக்கள் நம்பிக்கை வைத்துள்ள  பெருமக்களை நியமிப்பது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கும் என்று பிரதமர்துறை  அமைச்சர் பால் லவ் கூறியிருந்தார்.

1 paul“அம்பிகாவை அதில் ஒருவராக நியமிக்க வேண்டுமா,  அரசு அதையும் பரிசீலிக்க ஆயத்தமாக உள்ளது”, என ஆஸ்ட்ரோ அவானியிடம் நேற்று  லவ் (வலம்) கூறினார்.

அது பற்றிக் கருத்துரைத்த அம்பிகா,  குற்றத் தடுப்புச் சட்டத் திருத்தம் “முரண்பாடான செயல்முறை” என்றும் அது, மனித உரிமைகளை மீறுவதாகவும் கூறினார்.

“நான் அந்நியமனத்தை  ஏற்றுக்கொண்டால் பிசிஏ திருத்தத்தை அங்கீகரிப்பதாக அர்த்தமாகும்”, என்றவர் மலேசியாகினியிடம் விளக்கினார்.

இதுதான் கொள்கைவாதிகளுக்கும் நாற்காலிவாதிகளுக்கும் உள்ள வேறுபாடு.  நாற்காலிவாதிகளும் துட்டுவாதிகளும் நிறைந்து கிடக்கும் இந்நாட்டில் நாற்காலி பிச்சை போட்டு காரியம் சாதித்து விடலாம் என்று ஆட்சியில் இருப்பவர்கள் நினைக்கின்றனர். அவர்களில் இந்த நேர்மைக்கான அமைச்சர் பால் லோவும் ஒருவர்.

நீர் ஒரு செனட்டரா என்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது, புத்ரா ஜெயாவை கேளுங்கள் என்று கூறிய இந்த பால் லோ இப்படி ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

 

 

 

TAGS: