சட்டத்துறைத் தலைவரை (ஏஜி) ஓரங்கட்டிவிட்டுத்தான் அரசாங்கம் தடுப்புக் காவல் சட்டத்தைத் தாக்கல் செய்ததா?
மூத்த வழக்குரைஞர் அம்பிகா ஸ்ரீநிவாசன் இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியில் பேரணி ஒன்றில் உரையாற்றிய அம்பிகா, கடந்த ஜூலை மாதம் ஏஜி அப்துல் கனி பட்டேய்ல் தடுப்புக் காவல் சட்டத்தை எதிர்ப்பதாக பொதுவில் அறிக்கை விட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி இக்கேள்வியை முன்வைத்தார்.
“அரசாங்கம் ஏஜி-இன் ஆலோசனையைக் கேட்டதா? ஏஜி அதில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி இருப்பதால் அவரின் அலோசனை நாடப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன்”, என்றாரவர்.