பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அம்பிகா: ஏஜி-இன் சொல்லுக்கு மதிப்பில்லையா?
சட்டத்துறைத் தலைவரை (ஏஜி) ஓரங்கட்டிவிட்டுத்தான் அரசாங்கம் தடுப்புக் காவல் சட்டத்தைத் தாக்கல் செய்ததா? மூத்த வழக்குரைஞர் அம்பிகா ஸ்ரீநிவாசன் இக்கேள்வியை எழுப்பியுள்ளார். இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியில் பேரணி ஒன்றில் உரையாற்றிய அம்பிகா, கடந்த ஜூலை மாதம் ஏஜி அப்துல் கனி பட்டேய்ல் தடுப்புக் காவல் சட்டத்தை எதிர்ப்பதாக பொதுவில்…
சிவில் வழக்கைப் பேசித் தீர்த்துக்கொள்ளும் முயற்சியில் அரசாங்கமும் பெர்சேயும்
அரசாங்கமும் பெர்சேயும், கடந்த ஆண்டு பெர்சே இயக்கக் குழு உறுப்பினர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட சிவில் வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியில் பேசித் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன. இன்று அதன்மீது நடைபெறவிருந்த விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 16, 17-க்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பெர்சே 2.0 இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன்…
‘தொகுதி எல்லை நிர்ணயத்தால் உண்மையில் பாதிக்கப்பட்டது மலாய்க்காரர்களே’
தேர்தல் தொகுதிகள் முறைகேடாக நிர்ணயம் செய்யப்பட்டதால் மலாய்க்காரார்களே உண்மையில் Read More
பெர்சே: பெர்சே 4.0 பேரணிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை
பெர்சே 4.0 பேரணியை ஏற்பாடு செய்வதாகக் கூறப்படுவதைத் தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்காக போராடும் பெர்சே 2.0 அமைப்பு மறுத்துள்ளது. பேரணி ஏற்பாடு செய்யும் நோக்கம் எதுவும் தங்களுக்கு இல்லை என பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் வொங் சின் ஹுவாட்(கீழே) மலாய் மெயில் நாளேட்டிடம் கூறினார். அதற்குப் பதிலாக…
பயந்தாங்கொள்ளிகள்போல் ஓட்டம் பிடிக்கக்கூடாது; பெர்சே ஆண்டி ஆலோசனை
முதிய வயதிலும் பெர்சே 2.0 பேரணியில் உற்சாகத்துடன் கலந்துகொண்டதன் வழி பிரபலமானவர் என்னி ஊய். அவர், நேற்றிரவு ஜிஞ்சாங் போலீஸ் நிலையத்துக்குமுன் மெழுகு ஏந்திய கூட்டத்தில் கூடியிருந்தவர்களுக்கு அன்பான குரலில் சில அறிவுரைகளை எடுத்துரைத்தார். போலீசார், கூட்டத்தைக் கலைக்க முற்பட்டால் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும் என்றாரவர். “நாம்…
சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் கொண்டு வரப்படுவதை பெர்சே சாடுகின்றது
சந்தேகத்துக்குரிய ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் விமானத்தில் கொண்டு வரப்பட்டு கடுமையான போட்டி நிகழும் மாநிலங்களுக்கும் தொகுதிகளுக்கும் கொண்டு செல்லும் முயற்சிகளை பெர்சே கண்டித்துள்ளது. அந்த முயற்சிகள் மலேசியா முழுவதும் உள்ள உண்மையான வாக்காளர்களுடைய விருப்பங்களை அப்பட்டமாக மீறுவதாகும் என அது நேற்று பின்னேரம் விடுத்த அறிக்கையில் வருணித்தது. "வாக்களிப்பு தினத்துக்கு…
வாக்களிக்குமாறு பெர்சே ஆதரவாளர்கள் மக்களைக் கேட்டுக் கொண்டனர்
பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்த முதலாம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட பெர்சே ஆதரவாளர்கள் மத்திய கோலாலம்பூரில் உள்ள சாலைகள் வழியாக அணி வகுத்துச் சென்றனர். மஞ்சள் நிற உடை அணிந்திருந்த அவர்கள் பிற்பகல் மணி 1.30க்கு தொடங்கி பாசார் செனியிலிருந்து கோலாலம்பூர் சிலாங்கூர் சீனர் அசம்பிளி…
பிஎன் பயமுறுத்துகின்றது, வளங்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றது என பெர்சே சாடுகிறது
பிஎன் தனது பிரச்சாரத்தின் போது மக்களுக்கு அச்சத்தை மூட்டுவதாகவும் அரசாங்க வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் பெர்சே குற்றம் சாட்டியுள்ளது. "அரசாங்க மாற்றம் இடையூறுகளை ஏற்படுத்தும் எனக் கூறி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த பிஎன் தலைவர்கள் இன்னும் முயன்று வருகின்றனர்," என அந்த அமைப்பைச் சேர்ந்த ஐரின் பெர்ணாண்டஸ் இன்று…
குடியேற்றக்காரர்கள் மீது வெறுப்பும் சந்தேகமும் வளரக் கூடும் என பெர்சே…
ஆவி வாக்காளர்கள், தேர்தல் மோசடி பற்றிய அச்சம், குடிநுழைவுக்காரர்கள் மீது காழ்ப்புணர்ச்சியாகி மாறி இனவாதத் தாக்குதல்களுக்கு வழி வகுத்துள்ளதாக பெர்சே எச்சரித்துள்ளது. அரசியல் செராமாக்களிலும் இணைய வீடியோக்களிலும் துண்டுப் பிரசுரங்களிலும் குடியேற்றக்காரர்களை இழிவு படுத்தும் பிரச்சாரம் நிகழ்வதாக புகார்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் போராடும் அந்த இயக்கம் கூறியது.…
பெர்சே: தேர்தல் பரப்புரை விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை தேவை
தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்காக போராடும் கூட்டமைப்பான பெர்சே, பரப்புரைக்கான காலம் ஒதுக்கப்படுவதற்குமுன்பே பரப்புரைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக தேர்தல் குற்றச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஜோகூர் பாருவில், ‘Undilah Barisan Nasional’(பிஎன்னுக்கு வாக்களியுங்கள்) என்ற சொற்களுடன் பிஎன் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருப்பதை அது சுட்டிக்காட்டியது.…
FCAS-சைத் தேர்தல் பார்வையாளர் நிலையிலிருந்து அகற்றுங்கள்
அண்மையில் சபாவைச் சேர்ந்த ஒர் அரசு சாரா அமைப்பு பிஎன் -னுக்கு பிரச்சாரம் செய்திருப்பதால் அதனை வரும் பொதுத் தேர்தலில் பார்வையாளராக இருப்பதிலிருந்து விலக்கி வைக்குமாறு சபா பெர்சே தேர்தல் ஆணையத்தைக் (இசி) கேட்டுக் கொண்டிருக்கிறது. "தேர்தல் பார்வையாளர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் பிரச்சாரம் செய்யக் கூடாது. அவர்கள்…
பெர்சே என்எஸ்டி-க்கு எதிராக அவதூறு வழக்கை சமர்பித்தது
ஆங்கில மொழி நாளேடான நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி), தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே, அரசாங்கத்தின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்க முயலுவதாக குற்றம் சாட்டி வெளியிட்ட செய்தி தொடர்பில் பெர்சே அந்த நாளேடு மீது அவதூறு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. "நாங்கள் அந்த செய்தியை மிகவுன் கவனமாக ஆய்வு…
கட்டுப்பாட்டை தாம் இழந்ததாகக் கூறப்படுவதை அம்பிகா மறுக்கிறார்
பெர்சே 3.0 பேரணியின் போது கூட்டத்தினர் மீதான கட்டுப்பாட்டை தாம் இழந்து விட்டதாகக் கூறப்படுவதை பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் மறுத்துள்ளார். அந்த நிலைக்கு போலீசாரே காரணம் என அவர் சொன்னார். கலைந்து செல்லுமாறு தாம் விடுத்த வேண்டுகோளை சிலர் மட்டுமே கேட்க முடிந்த போதிலும் கூட்டத்தினர்…
எட்டாவது பெர்சே உறுப்பினரை குடிநுழைவுத் துறை நிறுத்தியுள்ளது
இந்த நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக குடிநுழைவு வாயிலைக் கடந்து செல்லாமல் இன்னொரு பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். போலீஸ் உத்தரவின் பேரில் தாம் கடந்த சனிக்கிழமையன்று குறைந்த கட்டண விமான நிலைய முனையத்தில் தாம் நிறுத்தப்பட்டதாக குழு உறுப்பினரான அருள் பிரகாஷ் கூறினார். "நான் கறுப்புப்…
பெர்சே செயல்குழு உறுப்பினர் சாபாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு
தேர்தல் சீரமைப்புக்காக போராடும் அமைப்பான பெர்சே 2.0-இன் இன்னொரு உயர்நிலை உறுப்பினருக்கும் சாபாவுக்குள் அடியெடுத்து வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் அஹ்மட் ஷுக்ரி அப் ரெஜாப் இன்று காலை சாபாவுக்குள் நுழைய முற்பட்டபோது மாநிலக் குடிநுழைவு அதிகாரிகளால் தடுக்கப்பட்டார். மலேசியாகினி அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது,…
பெர்சே இசை நிகழ்ச்சியில் கூட்டம் குறைவுதான் ஆனால், அது மனஉறுதி…
நேற்று பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற அரங்கில் பெர்சே 2.0-இன் நிதிதிரட்டும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதில் பெர்சே இயக்கக்குழு உறுப்பினர்கள், இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் தலைமையில் பாடினார்கள். “பெர்சே, பெர்சே, பெர்சே, தேவை தூய்மையான தேர்தல், பெர்சே, பெர்சே, பெர்சே தேவை தூய்மையான அரசியல், பெர்சே,…
பெர்சே தலைவர்களுக்குத் தொந்திரவா? குடிநுழைவுத்துறையைக் கேளுங்கள் : ஐஜிபி
கடந்த ஒரு மாதமாக பெர்சே தலைவர்கள் வெளிநாடு செல்ல முற்படும் வேளையில் விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படுவது பற்றி வினவியதற்குக் குடிநுழைவுத் துறையிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும் என்று போலீஸ் கூறியது. இன்று காலை புக்கிட் அமானில், இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் அவ்வாறு கூறினார்.…
நஸ்ரி: பெர்சே தலைவர்கள் சட்டத்தை மீறியதால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்
பெர்சே தலைவர்கள் ‘பெர்சே’ என்று அழைத்துக் கொள்வதற்காக அல்லாமல் சட்டத்தை Read More
‘பெர்சே, சுவாராம், பிஎஸ்எம்’ ஆகியவை தீயவை என பள்ளிப் பிள்ளைகளிடம்…
சிலாங்கூர் செமினியில் உள்ள தொடக்கத் தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட போலீஸ் விளக்கக் கூட்டம், பெர்சே, சுவாராம், பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சி ஆகிய 'தீய சக்திகள்' பற்றிய பாடமாக மாறியது. அந்தத் தகவலை பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் வெளியிட்டார். லாடாங் செமினி…
பெர்சே தலைவர்கள் விமான நிலையங்களில் அச்சுறுத்தப்படுகின்றனர்
கடந்த மாதத்திலிருந்து குறைந்தது மூன்று பெர்சே குழு உறுப்பினர்கள் அனைத்துலகப் பயணங்களுக்காக விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் சிறிது நேரத்துக்குத் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடருவதற்கு இறுதியில் அனுமதிக்கப்பட்டாலும்- அரசு சாரா அமைப்புக்கள் மீது நெருக்குதலை அரசாங்கம் அதிகரித்துள்ள வேளையில் அது தங்களை அச்சுறுத்தும் நடவடிக்கை என அண்ட்ரூ…
‘பெர்சே கேள்வி, கல்வித் துறை வழிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது’
நன்னெறிக் கல்விப் பாடத்துக்கான எஸ்பிஎம் சோதனைத் தேர்வு வினாத்தாளில் இடம் Read More
எஸ்பிஎம் சோதனைத் தேர்வில் பெர்சே கேள்வி ‘ஒரு பிரச்னை அல்ல’
அண்மையில் நடத்தப்பட்ட எஸ்பிஎம் சோதனைத் தேர்வுகளில் பெர்சே 3.0 பேரணி மீதான கேள்வி இடம் பெற்றது 'ஒரு பிரச்னையே அல்ல' என்று கல்வித் துணை அமைச்சர் புவாட் ஸார்க்காஷி கூறுகிறார். "அது இன, சமய உணர்வுகளைக் காயப்படுத்தாத வரையில் அல்லது எந்த ஒரு தனிநபரையும் குறை கூறாத வரையில்…
போலீஸ் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெர்சே 250 ஆயிரம் ரிங்கிட் திரட்டுகிறது
பெர்சே என அழைக்கப்படும் தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கான கூட்டணி '1 ரிங்கிட்-டுடன் மாற்றத்தைக் கொண்டு வருவோம்' என்னும் தனது இயக்கத்திற்குப் பொது மக்களிடமிருந்து நன்கொடைகளைக் கோரியுள்ளது. ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணியின் போது போலீஸ் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களுடைய மருத்துவ, சட்ட செலவுகளுக்கு அந்தப் பணம் பயன்படுத்தப்படும். போலீஸ்…