பிஎன் பயமுறுத்துகின்றது, வளங்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றது என பெர்சே சாடுகிறது

vanபிஎன் தனது பிரச்சாரத்தின் போது மக்களுக்கு அச்சத்தை மூட்டுவதாகவும் அரசாங்க வளங்களைத் தவறாகப்  பயன்படுத்துவதாகவும் பெர்சே குற்றம் சாட்டியுள்ளது.

“அரசாங்க மாற்றம் இடையூறுகளை ஏற்படுத்தும் எனக் கூறி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த பிஎன்
தலைவர்கள் இன்னும் முயன்று வருகின்றனர்,” என அந்த அமைப்பைச் சேர்ந்த ஐரின் பெர்ணாண்டஸ் இன்று
நிருபர்களிடம் கூறினார்.

அரசியல் வன்முறைகளையும் பராமரிப்பு அரசாங்கத்தையும் கண்காணிக்கும் பெர்சே சிறப்புக் குழுவுக்கு அவர்  தலைமை ஏற்றுள்ளார்.van1

“அத்தகைய மறைமுகமான மருட்டல்களை விடுப்பதற்குப் பதில் எல்லா கட்சிகளும் தங்களது கொள்கைகள்  திட்டங்கள் மீது தகவல்களையும் வாதங்களையும் வழங்கும் பிரச்சாரத்திற்குத் திரும்ப வேண்டும்,” என அவர்  கேட்டுக் கொண்டார்.

“அவ்வாறு செய்வதின் மூலம் மக்கள் தகவல் அறிந்த தேர்வைச் செய்ய முடியும்,” என்றார் ஐரின்
பெர்ணாண்டஸ்.

இதனிடையே கூட்டரசு அரசாங்கம் தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசாங்க வளங்களை தொடர்ந்து தவறாகப்
பயன்படுத்தி வருவதாக அந்தக் குழுவின் இணைத் தலைவரான ஜைட் கமாருதின் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ள பராமரிப்பு
அரசாங்கத்தின் கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நோங்சிக் ஜைனல் அபிடினுக்கு
உதவும் பொருட்டு கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் பயன்படுத்தப்படுவது சம்பந்த ‘அப்பட்டமான’
அத்துமீறல்களை அவர் சுட்டிக் காட்டினார்.

 

TAGS: