வாக்களிக்குமாறு பெர்சே ஆதரவாளர்கள் மக்களைக் கேட்டுக் கொண்டனர்

bersihபெர்சே 3.0 பேரணி நிகழ்ந்த முதலாம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட பெர்சே ஆதரவாளர்கள் மத்திய கோலாலம்பூரில் உள்ள சாலைகள் வழியாக அணி வகுத்துச் சென்றனர்.

மஞ்சள் நிற உடை அணிந்திருந்த அவர்கள் பிற்பகல் மணி 1.30க்கு தொடங்கி பாசார் செனியிலிருந்து  கோலாலம்பூர் சிலாங்கூர் சீனர் அசம்பிளி மண்டபம் வரையில் இரண்டு மணி நேரத்துக்கு ஊர்வலமாகச்  சென்றனர்.

அந்த மண்டபத்தில் மாலை ஐந்து மணிக்கு புத்தக வெளியிடப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தாங்கள் சென்ற வழிகளில் மக்களிடம் மஞ்சள் நாடாக்களையும் புத்தகக்குறிகளையும் வழங்கினர். அவர்கள் அவ்வப்போது “Jom balik undi, hantu jangan mari” (வாக்களிக்க நாம் வீடு திரும்புவோம். ஆவி வாக்காளர்கள் வர வேண்டாம்) என முழங்கினர்.

ஊர்வலம் தொடங்கிய முதல் 30 நிமிடங்களுக்கு மழை பெய்த போதிலும் அவர்கள் அதனைச் செய்தார்கள். அந்தக் குழுவினர் டாத்தாரான் மெர்தேக்காவைச் சென்றடைந்ததும் தான் மழை நின்றது. அங்கு அவர்கள் தேசிய கீதத்தை பாடினர்.

அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை எதிர்க்கும் Kill the Bill என்ற அமைப்பு அந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. பெர்சே வழிகாட்டல் குழு உறுப்பினர்களான மரியா சின் அப்துல்லாவும் வோங் சின் ஹுவாட்-டும் உடன் இருந்தார்கள்.

 

TAGS: