எட்டாவது பெர்சே உறுப்பினரை குடிநுழைவுத் துறை நிறுத்தியுள்ளது

இந்த நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக குடிநுழைவு வாயிலைக் கடந்து செல்லாமல் இன்னொரு பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

போலீஸ் உத்தரவின் பேரில் தாம் கடந்த சனிக்கிழமையன்று குறைந்த கட்டண விமான நிலைய முனையத்தில் தாம் நிறுத்தப்பட்டதாக குழு உறுப்பினரான அருள் பிரகாஷ் கூறினார்.

“நான் கறுப்புப் பட்டியலில் இருப்பதால் வாயிலில் குடிநுழைவு அதிகாரிகள் நிறுத்தினர்.  நான் காரணம் கேட்ட போது போலீஸ் உத்தரவு என அவர்கள் பதில் கூறினர்,” என அவர் தொடர்பு கொள்ளப்பட்ட போது சொன்னார்.

குடிநுழைவு அதிகாரிகள் தம்மை 30 நிமிடங்களுக்கு நிறுத்தி வைத்து தமது பாஸ்போர்ட், விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி ஆகியவற்றை பிரதி எடுத்துக் கொண்டதாக அருள் சொன்னார்.

அவர் வர்த்தகம் காரணமாக வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

“நான் விமானத்தில் ஏற வேண்டிய கட்டாயம் இருப்பதை நான் குடிநுழைவு அதிகாரிகளுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருந்தேன். நான் நிறைய கேள்விகளை கேட்கவில்லை. பின்னர் போலீஸில் சோதனை செய்வதற்காக அந்த குடிநுழைவு அதிகாரியின் பெயரை மட்டும் குறித்துக் கொண்டேன்.’

அருள் பிரகாஷ், புசாட் கோமாஸ் என்ற அரசு சாரா அமைப்பின் நிர்வாக இயக்குநரும் ஆவார்.

பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், குழு உறுப்பினர்களான மரியா சின் அப்துல்லா, வோங் சின் ஹுவாட், அண்ட்ரூ கூ, இயோ யாங் போ, தோ கிம் வூன், கே ஆறுமுகம் ஆகியோரும் நாட்டை விட்டு புறப்படுவதற்கு முன்னர் குடிநுழைவுத் துறை சிறிது நேரம் தடுத்து வைத்துள்ளது.

வோங், அம்பிகா, மரியா ஆகியோர் சரவாக்கிற்குள் நுழையவும் அனுமதிக்கப்படவில்லை. குழு உறுப்பினரான அகமட் சுக்ரி அப்துல் ரஸாப் தாம் பிறந்த மாநிலமான சபாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

“தேவையற்ற அந்தத் தாமதங்கள்” அச்சுறுத்தல்கள் என பெர்சே கூறியுள்ளது. அதனை உடனடியாக நிறுத்துமாறும் அது கேட்டுக் கொண்டது.

 

TAGS: