அரசாங்கமும் பெர்சேயும், கடந்த ஆண்டு பெர்சே இயக்கக் குழு உறுப்பினர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட சிவில் வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியில் பேசித் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன.
இன்று அதன்மீது நடைபெறவிருந்த விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 16, 17-க்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பெர்சே 2.0 இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கூறினார்.
“இரு தரப்பும் பேசித் தீர்வுகாணும் சாத்தியங்களை விவாதித்து வருகிறோம். ஜனவரிக்குள் தீர்வு காணாவிட்டால் பிறகு நீதிமன்றம் செல்வோம்”, என்றாரவர்.
கடந்த ஆண்டு பெர்சே 3.0 ஆர்ப்பாட்டத்தின்போது விளைந்த சேதங்களுக்கு இழப்பீடு கோரி அரசாங்கம் அம்பிகாவுக்கும் அக்குழுவின் இதர ஒன்பது பேருக்கும் எதிராக அவ்வழக்கைத் தொடுத்தது.